Salangai Oli - சலங்கை ஒலி - 10 - 14 .02 . 2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

முதற்கண் நான் உங்களிடம் இந்தக் கிழமையின் serial review & analysisஇனை ஒன்றாகப் பதிவேற்றம் செய்வதற்கு மன்னிப்பைக் கேட்டுக் கொள்கின்றேன். அதற்கான காரணம் எனது இதயத்தில் ஏற்பட்ட சகவீனம் அதனால் நடைபெற்ற சத்திரசிகிச்சைதான் என்பதனைக் கூறிக் கொண்டு இந்தப் பதிவினைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், பார்க்கவுள்ள அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.

இன்றைய Serial Review & Analysis ஆனது 10ஆம், 14ஆம் திகதிகளை உள்ளடக்கிய Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Salangai Oli - சலங்கை ஒலி - 10 - 14 .02 . 2026

பூமிக்கு அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருக்க வேண்டும், தனது அம்மாவின் ஆசைகளை, கனவுகளைத் தான் நனவாக்க வேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்டுள்ள அதே நேரத்தில், அபூர்வாவோ சொத்துக்களை எல்லாம் தனக்கு எழுதித் தரும்படி பூமியின் கல்யாணத்தினை வைத்து மனத்தினை திசை திருப்ப முயன்றாலும், பூமி மிகவும் திடமாகவும், நிதானமாகவும் முடிவினை ஏற்கனவே எடுத்து வைத்திருக்கின்றாள். இதற்கு கிடைக்கும் gapபிலேயே ககன் பூமியை கல்யாணம் பண்ண நினைப்பதோ இந்த சொத்திற்காகத்தான் என்றும், ககனுக்கும் இந்தச் சொத்தினில்தான் கண் என்றும் கதையினை மறுபக்கமாக புரட்டிப் போடுகின்றாள் அபூர்வா.

கோவிலுக்கு, கோமாவில் இருக்கும் தனது அப்பாவின் பிறந்த தினத்தன்று சென்று அர்ச்சனையினைச் செய்து வந்த பூமிக்கு ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா என்று பூமி ஏங்கிக் கொண்டிருக்கையிலே, பூமிக்கோ கோவில் பூசாரி சொன்னதுதான் ஞாபகத்திற்கு வந்தது. இதனால், பூமிக்கு கடவுளினால் ஒரு அதியம் நடக்கும் என்று தனது அப்பாவின் நெற்றியிலே பூசாரி கொடுத்த நீறினை வைத்தாள்.

அன்றைய தினம்தான் அபூர்வாவும் தனது புருஷன், ஷரத்சந்திராவைக் கடத்திக் கொண்டு போய் வைத்து பூமியை வெருட்டி சொத்தினைத் தனதாக்கத் திட்டத்தினைப் போட்டாள். அதற்காக தனது அடியாட்களை வீட்டிற்கு அழைத்தாள், வீட்டின் லைற்கள் அனைத்தையும் நிற்பாட்டி விட்டாள், அபூர்வா. இந்த சமயம்தான் பூமி, ககனுடன் கதைத்து விட்டு வீடு திரும்பினாள். இதனை அபூர்வாவோ எதிர்பார்க்கவி்ல்லை.

பூமியைக் கூட்டிக் கொண்டு தங்களது engagementறுக்கான shoppingக்குக் கூட்டிச் சென்று காப்பி குடிக்கையிலே இருவரும் அவரவருக்கு வாங்கிய பரிசுக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்தப் பரிசினைத்தான் பூமி தனது தகப்பனுக்கு பரிசாகக் கொடுக்கும் போதுதான் தெரிந்தது அந்தப் பரிசானது இடம் மாறிவிட்டது என்று. அதாவது, தனது தகப்பனுக்கு வாங்கிய பரிசானது ககனிடமும், ககனுக்கு வாங்கிய பரிசானது தனது தகப்பனிடமும் மாறி வந்து விட்டது என்பது.

இதனையிட்டு, கலங்கிப் போனாள் பூமி. அதுமட்டுமல்லாமல், நட்சத்திரா, பூமியை தகாத வார்த்தைகளைப் பாவித்து கலங்க வைத்து விட்டாள். ஆனால், பூமியின் வாதமோ, தனது அம்மா ஷோபச்சந்திரா இப்போது உயிருடன் இருந்திருந்தால், நீ, இந்தப் பூமியில் தடம் பதித்திருக்க முடியாது என்பதனை உன் அம்மா அபூர்வாவிடம் கேட்டுத் தெரிந்து கொள் என்று உண்மையினை வேண்டுமென்றே சொன்னாள். நடுங்கிப் போனாள் அபூர்வா. ஆனால், நட்சத்திராவுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

அபூர்வாவோ தனது மாமா ஷரத்சந்திராவை அடைவதற்காக ஷோபச்சந்திராவைக் கொலை செய்து ஷரத்சந்திராவை அடைந்தாள். ஆனால், ஷோபச்சந்திராவின் மரணம் இந்த உலகத்தில்தானே நடந்தது.

ஷோபச்சந்திராவின் சொத்தினைத் தானே வெட்கமில்லாமல் அனைவரும், குறிப்பாக அபூர்வா அனுபவித்துக் கொண்டிருக்கின்றாள். இப்படி ஒரு கர்ப்பிணியைக் கொலை செய்துவிட்டு, அவளின் சொத்தினை ஒருவிதமான குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் ஜீவிக்கும் அபூர்வாவைப் போல இருப்பவர்களை எந்த categoryக்குள் சேர்ப்பது?

பூமியின் பிராத்தினைதான் ஷரத்சந்திராவை உயிர்க்க வைத்தது. இதனால், அனைவரும் மகிழ்ந்தார்கள், அபூர்வாவைத் தவிர. அத்துடன் அபூர்வாவுடன் ஒட்டுண்ணியாக இருக்கும் மருதாணிக்குக் கூட ஒருவிதமான குற்ற உணர்வுகளும் இல்லையே! மருதாணியோ அபூர்வாவுடன் எல்லா அட்டூளியத்திற்கும் ஒத்தோதிக் கொண்டிருக்கின்றா. இதனால், அபூர்வாவின் பாவங்களுக்குரிய தண்டனையிலிருந்து ஒரு பங்கினை மருதாணியும் பெற்றுக் கொள்ளுவா என்பது கண்கூடு.

பூமி மாதிரி உடுத்திக் கொண்டு ஷாரதாவின் வீட்டிற்குப் போன நட்சத்திரா, மொக்கீனப்பட்டுக் கொண்டு வீடு திரும்பினாள். ஆனால், நட்சத்திராவோ ஷாரதாவின் வீட்டை விட்டு வெளிக்கிடுகையிலே யாராவது தனக்கும், மாமாவிற்குமான கல்யாணத்தினை தடுப்பார்களாக இருந்தால் அவர்கள் அனைவரையும் எரி்த்துக் கொண்டு விடுவேன் என்று வெருட்டி விட்டு வந்துள்ளதையும் இங்கு அபூர்வாவின் குணத்தினை இவளில் காணக்கூடியதாக இருக்கின்றது.

பூமியின் வேண்டுதலால் உயிர்பெற்றார் ஷரத்சந்திரா. அந்த கணமே கிறிஷ்ணபிரஷாத் தனது மைத்துணன் ஷரத்சந்திராவிடம் பூமிதான் உங்களுக்கும், தங்கச்சி ஷோபச்சந்திராவுக்கும் பிறந்த குழந்தை என்றும், பூமி இப்போது உங்கள் மகள் என்று DNA Test மூலம் நிரூபணமாகியுள்ளது என்பதனை கிறிஷ்ணபிரஷாத் ஷரத்சந்திராவிடம் கூறிவிட்டார். குதூகலத்தில் இருந்து ஷரத்சந்திராவை அவரின் சந்தோஷத்தினை கெடுத்து அவரை மீண்டும் கோமா நிலைக்குத் தள்ளி விட்டாள் அபூர்வா.

அபூர்வாவுக்கு, தன் மாமா மீண்டும் சுயநினைவு பெறக்கூடாதென்று மிகவும் உறுதியாக இருக்கின்றாள். ஏனென்றால், தனது மாமாவின் கொலை முயற்சிக்குத் தானே காரணம் என்பதனால்தான். இதற்காக அவரை கொல்லுவதற்கும் தயங்காதவளாக மாறியுள்ள அபூர்வா.

இதற்காக அபூர்வாவின் அடியாள் ஷரத்சந்திராவைக் கொல்வதற்காக வீட்டினுள்ளே நுழைந்தவன், இப்போது ஷரத்சந்திராவைக் கடத்திக் கொண்டு போவதற்காக வந்தவன், ஷரத்சந்திராவை வெளியில் கொண்டு போகையிலே பூமியுடனும், பின்பு Cheryயுடனும் ஏற்பட்ட கைகலப்பில், அபூர்வாவின் அடியாள் ACP நயனியிடம் சிக்கினான். அவனிடமிருந்து உண்மையினைக் கறந்தெடுக்கலாம் என்றால் அது நடக்கவி்ல்லை. இதனால், அவனை கொல்லப் போகின்றோம் என்று வெருட்டி கடைசியான முயற்சியில் இறங்கிய சமயம்தான் மேலிடத்திலிருந்து ACP நயனிக்கு அந்த இரவினிலே பதவி இடமாற்றம் அறிவிக்கப்பட்டது. இது கொடுமை என்று நயனி கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நயனியின் மேலதிகாரி.

பூமி யாருக்கு உண்மையினைச் சொல்லக் கூடாதோ அவளுக்கு, அதாவது, அபூர்வாவுக்கு சொல்லி விட்டாள். உனக்கு இனி நடக்கப்போவது நயனியிடம் அகப்பட்டுள்ள உனது ஆள் என்பதனை. உண்மையினை, அதாவது உன் பெயரை அவன் சொன்னால் எப்படி இருக்கும் உனக்கு என்பதுதான். இதனால், அபூர்வா உடனே மேலிடத்திடம் தொடர்பு கொண்டு தன் கழுத்து இறுக முன்பு உடனடியாக நயனிக்கு இடம் மாற்றம் செய்வித்தாள்.

கையாலாகாத நிலையினில் கடைசியாக இருந்த கேசினைக் கைவிட்டு விட்டு உடனடியாக புதிய இடத்திற்குப் போக வேண்டிய கட்டாயத்தில் நயனி.

இந்த விஷயத்தினை பற்றி அறிய வந்த பூமியிடம் கவலையுடன் சொன்ன நயனி. இதற்கு பூமி என்ன செய்யலாம் என்றால், இதனை உடனே ககனுக்கு அறிவித்து நயனியின் இடம் மாற்றத்தினை றத்துச் செய்யலாம் என்ற ஊகம் இருக்கின்றதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் இது நடப்பதற்கான சாத்தியக் கூறு அமையுமா?

பூமிக்கு, தனது கணவன் ஷரத்சந்திராவிடம் மவுசு அதிகரிக்கின்றது என்றுணர்ந்த அபூர்வா, உடனே ஒரு பெண்ணை ஒழுங்கு படுத்தினாள். அவளும் ஷரத்சந்திராவுக்கும் தெரிந்தவளைத்தான் அபூர்வா ஒழுங்குபடுத்தியிருந்தாள். வந்தவளோ ஷரத்சந்திராவிற்கு ஒரு சலாம் போட்டு விட்டு, உடனயாக பூமி – ககன் ஒன்றாக இருந்து மீடியாவினால் கேவலங்கெட்டதினை ஊதிப் பெரிதாக்கினாள். இதற்கெல்லாம் காரணம் ககன்தான் என்றும், அதனால் தங்களது பெயரைக் கெடுக்க வேண்டும் என்றும் ஷரத்சந்திராவிடம் போட்டுக் கொடுத்தாள்.

அபூர்வா சொன்னால் வேதவாக்காக நினைக்கும் ஷரத்சந்திரா, வேறு எவர் சொன்னாலும் அவருக்கு ஏறவே ஏறாது, அதுமட்டுமல்லாமல், ஏற்றுக் கொள்ளவும் மாட்டார். இந்த weaknessஇனை நன்றாகப் புரிந்து கொண்டவளாய் அபூர்வா அதற்கேற்ற மாதிரி ஷரத்சந்திராவை ஆட்டிப்படைத்தாள்.

இதனால் கோபம் கொண்ட ஷரத்சந்திராவோ, அவரது ஆயுதமான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ககனை கொல்வதற்காக வெளிக்கிடுகையில் தடுத்து நிறுத்தினார் கிறிஷ்ணபிரஷாத். ஏனென்றால், பூமியும், ககனும், அன்று அந்த குளிர் அறையினுள் இருப்பதற்கு ஆரம்ப காரணம் அபூர்வா என்பதும், அந்த குளிர் அறையினுள் வைத்து அடைத்தது நடசத்திரா என்பதும் இதுவரைக்கும் ஒருவரும் வெளியிடவில்லை. ஏனென்றால், இந்த விஷயம் தெரிந்தது அபூர்வாவுக்கும், மருதாணிக்கும் மட்டும்தான்.

ஆனால், ககனுக்குத் தெரியும், பூமியைக் கொலை செய்ய தனது அம்மா அபூர்வா தனது அடியாட்களை அனுப்பி உள்ளா என்பதும் இன்று இரவே பூமி கொல்லப்படப் போகின்றாள் எனபதனை ககனுக்கு வெளியிட்டதே நட்சத்திரா என்பதனையும், வீடியோ எடுத்து ககன் வைத்துள்ளான். ஆனால், இந்தக் கதையினை ககனுக்குத் தெரிந்தும் ஏன் ககன் இன்னமும் ஒருவரிடமும் சொல்லவில்லை என்பதுதான் தெரியவில்லை. ஆனால், இந்தக் கதை எப்போது ஷரத்சந்திரா ககனுடன் நேராக மோதப் போகின்றாரோ அப்போதுதான் ககன் இதனைச் சொல்வதற்கான சந்தர்ப்பம் அமையலாம்.

இந்த உண்மையினை, அதாவது, ககனும் – பூமியும் அந்த குளிர் அறையினுள் முழு இரவுமாக அடைபட்டு இருந்ததற்குக் காரணம் கிறிஷ்ணபிரஷாத்திற்குத் தெரியாமலிருந்தாலும், மீடியாவிற்குத் தெரியப்படுத்தியது வேறு ஒருவரும் இல்லை, தான்தான் என்று கிறிஷ்ணபிரஷாத், ஷரத்சந்திராவிடம் சொல்லி, அவரைப் போக விடாமல் இடைமறித்தார். ஆனால், கிறிஷ்ணபிரஷாத் சொன்னதனை மறுபக்கமாக மாற்றி ஷரத்சந்திராவிடம் தனது மகன் ககனைக் காப்பாற்றுவதற்காகத்தான் கிறிஷ்ணபிரஷாத் சொல்கின்றான் என்று அபூர்வா எல்லார் முன்னிலையிலும் சொன்னாள். இதனையும் நம்பினார் ஷரத்சந்திரா.

ஏற்கனவே, கிறிஷ்ணபிரஷாத்தின் மேலே சாட்டப்பட்டிருந்த களவுக் குற்றத்தினை குறிக்கோள் காட்டி, தனது தங்கையின் கணவனும், தனது மைத்துணனுமான கிறிஷ்ணபிரஷாத்தை மீண்டும் எல்லார் முன்னிலையிலும் அடித்தார் ஷரத்சந்திரா. இதனால், எல்லார் முன்னிலையிலும் வெட்கப்பட்டு தலைகுனிந்த நிலையினில் கிறிஷ்ணபிரஷாத் தரையில் விழுந்தார்.

ஆனால், விலாந்தியாக உள்ள கிறிஷ்ணபிரஷாத்தின் மனைவியும், ஷரத்சந்திராவின் தங்கையுமான மீரா, தனது அண்ணன் ஷரத்சந்திரா தனது கணவன் கிறிஷ்ணபிரஷாத்தினை அடித்ததனை ஒருநாளும் நியாயம் கேட்காமல் அடங்கிப் போயிருக்கும் கையாலாகாத தனம் என்பதனைச் சுட்டிக் காட்டியதுமல்லாமல், ஷரத்சந்திரா மூலமாகவும், அபூர்வா மூலமாகவும் ககனுக்குள்ள ஆபத்தினை தடுத்து நிறுத்துவதற்குத்தான் தான் இங்கு என்ன கேவலம் தனக்கு நடந்தாலும் தன் குடும்பத்துடன் இருந்து கொண்டிருக்கின்றேன் என்பதனைப் புரிய வைத்தார் கிறிஷ்ணபிரஷாத்.

இந்த நிலையினில்தான், ஷாரதா, ககனிடம், பூமிக்கு மேல் விழுந்த வடுவினை இல்லாமால் ஆக்க வேண்டுமென்றால், ககன், பூமியைக் கல்யாணம் பண்ண வேண்டும் என்பதுதான் கிறிஷ்ணபிரஷாத்தினதும், ஷாரதாவினதும் திட்டமே. இதன் பாரதூரத்தினை அறிந்து கொள்ளாத ககன், இப்போது அவனது அம்மா ஷாரதா விளங்கப்படுத்தினை ஏற்றுக் கொண்டு இந்த கல்யாண விஷயத்தினை ககன், பூமியிடம் விளங்கப்படுத்தினான். இதனை நன்றாக பூமி புரிந்து கொண்டும், ஏற்றுக் கொண்டும் விட்டாள்.

இந்த ககனுக்கும், பூமிக்குமான கல்யாணம் இவர்களின் விருப்பத்தில் நடைபெறுமா?

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)