posted 8th March 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;
- கிறிஷ்ணபிரஷாத் கண்விழித்ததும், ஷரத்சந்திரா அவருடன் மல்லுக்கிழுத்தார்.
- கோவிலை விட்டு ஷாரதாவும், மீராவும் உறவுடனே வைத்தியசாலைக்குத் திரும்பினார்கள்.
- ஷாரதாவைக் கண்ட ஷரத்சந்திராவோ ஷாரதாவை அதட்டினார். தனது கணவன் இப்போது உயிருடன் இருப்பதற்கு ஷாரதாதான் காரணம் என்று எடுத்துரைத்த மீரா.
- கிறிஷ்ணபிரஷாத்தோ ஷரத்சந்திராவின் அதட்டலுக்குப் பயப்படாமல் மிகவும் இறுக்கிக் கதைத்தார்.
- பூமிக்கும், ககனுக்குமான கல்யாணத்தை நிறுத்துவதற்கு திட்டத்தினை போட்டுக் கொண்டிருக்கும் அபூர்வா.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Salangai Oli - சலங்கை ஒலி - 02 - 04.02.2026
கிறிஷ்ணபிரஷாத்தின் மனமோ கனத்தது, ஷாரதாவின் பத்திரத்தினைக் கண்டதும். அதுமட்டுமல்லாமல், அந்தப் பத்திரத்தில் கையொப்பம் இடும்படியாக அவரது மகன் ககன் அவரை கட்டாயப்படுத்தியது. இதனால், கிறிஷ்ணபிரஷாத் ககனை அடித்தது எல்லாமே ஒன்று சேர்ந்துதான் அவரின் மனதினை சுக்குநூறாக உடைத்தது.
மனமுடைந்த நிலையில், ஒருவரும் கிறிஷ்ணபிரஷாத்துடன் இல்லாத சமயம், தனிமை அவரை வாட்டியது. விவாகரத்துத் தருவதும், எனது உயிரைக் கேட்பதுவும் ஒன்றுதான். ஆனால், விவாகரத்து என்னால் தரமுடியாது. அதற்கீடாக எனது உயிரினை விடுகின்றேன் என்று ஷாரதாவிடம் சொல்லி விட்டு வந்த கிறிஷணபிரஷாத் தனது உயிரை மாய்ப்பதற்காக மிகவும் சக்தி வாய்ந்த நஞ்சினைக் குடித்துவிட்டார்.
உயிருக்குப் போராடிய நிலையில் கிறிஷ்ணபிரஷாத் வைத்தியசாலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவினில், வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையினில் இருக்கையிலும், அபூர்வாவின் தளபதியாக இருக்கும் மருதாணி கூறியது, ககனினதும், பூமியினதும் கல்யாணம் நிற்க வேண்டுமென்றால், கிறிஷ்ணபிரஷாத் சாக வேண்டும் என்ற புனிதமான அறிவுரை. யாருடைய குங்குமம் அழிந்தாலும் பரவாயில்லை, கல்யாணம் நின்றால் காணும் என்பது ஆபூர்வாவினதும், நட்சத்திராவினதும் வேதாந்தம்.
கிறிஷ்ணபிரஷாத் சாகணும், சாரதாவும், மீராவும் விதவையாகணும், அபூர்வா தானும், தனது மகளும் நல்ல குடும்பமாக சீவிக்க வேண்டும் என்று எவ்வளவு பெரிய ஆசை இவர்களுக்கு. உயிருடன் ஷோபச்சந்திராவை தீயினுள் கருக வைத்தவளாச்சே இந்த அபூர்வா, இவளுக்கு எங்கு இரக்கம் என்ற ஒரு குணாதிசயம் இருக்கும், அவள் மகள்தானே நட்சத்திராவிற்கு என்னென்றுதான் அந்த இரக்க சிந்தா வருமென்று எதிர்பார்க்கலாம்.
ஷாரதா விவாகரத்து கொடுத்ததும் பூமி, ககன் கல்யாணம் நிற்பாட்டுவதற்காக முழுவிடமான திட்டங்களையும் ஒழுங்குபடுத்தியுள்ளாள் அபூர்வா. ஆனால், நிட்சயதார்த்தம் நடக்கிறதோ என்னவோ கல்யாணமானது நடக்கவே நடக்காது. இந்த விஷயத்தில் அபூர்வா மிகவும் ஆர்வமாக இருக்கின்றா. இதற்கு முருதாணி ஒருபக்கம் நின்று ஊதிக் கொண்டிருக்கின்றா.
ககனின் விருப்பமோ தனது காலம் சென்ற அத்தையின் நினைவாக, கனவாக அரங்கேற்றவுள்ள நாட்டிய கலாமன்றத்தினை ககனே உருவாக்கி விட்டான். இதனை அபூர்வாவுக்குப் போட்டுக் கொடுத்தது சாதனா. நாட்டிய கலாமன்றத்தினை அரங்கேற்ற வேண்டுமானால், அதற்கு உத்தரவு தேவைப்படுவதனால், அதற்கான உத்தரவினைத் தடை செய்வதற்காகன முயற்சிகளை கட்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றாள் அபூர்வா.
இப்படியாக ஆரம்பமாக்கவுள்ள நாட்டிய அக்கடமியை உருவாக்குவதற்குரிய முதன்மையான போட்டியானது நடைபெறவுள்ளது. அதற்காக பூமி ஆடுவதற்கு முதலாவதாக ககனுக்கு பூமி ககனின் விருப்பத்திற்காக ஆடிக் காட்டினாள். இவர்கள் இருவரினதும் நாட்டியமும், அபிநயமும், சிவனுடையவும், பார்வதியுடையவும் நாட்டயமாக இது பிரதிபலிக்கின்றது.
ஷாரதாவோ தனது கணவனுக்காக கடவுளை வேண்டிக் கொள்ளுகையில், கோவிலில் இருந்த சாமி ஷாரதாவை வரவழைத்து மலையில் உள்ள அம்மனைத் தரிசித்து அவவின் வேண்டிய கடமைகளைச் செய்யும்போது கிறிஷ்ணபிரஷாத்தின் உயிர் பாதுக்காக்கப்படும் என்று கூறினார்.
இதனை ஒட்டுக் கேட்ட மீராவும் அதே கோவிலுக்குச் சென்று அதே நேர்த்தியினை செய்ய போட்டி போட்டா ஷாரதாவுடன். ஆனால், தெய்வத்தின் விருப்பம் யார் யார் இதனைச் செய்ய வேண்டுமென்பதுதான். தெய்வத்தின் விருப்பப்படி இந்த நேர்த்தியானது ஷாரதாவால்தான் நிறைவேற்றப்பட்டது. கிறிஷ்ணபிரஷாத்தும் உயிர் பிழைத்தார்.
கிறிஷ்ணபிரஷாத் உயிர் பிழைத்தார் என்பதற்காக ஷரத்சந்திரா சும்மா இருக்கவில்லை, கிறிஷ்ணபிரஷாத்துடன் ஈட்டிக்குப் போட்டியாக நின்றார். இதனால், கிறிஷ்ணபிரஷாத் உண்மையினைச் சொன்னார். இதனால் வாயடைத்துப் போய் நின்றார் ஷரத்சந்திரா. இப்படி கிறிஷ்ணபிரஷாத்தின் சொல்லினை வைத்து வாயடைத்துப் போக ஷரத்சந்திராவை அபூர்வா விட்டு விடுவாளா? வேறொரு கதையினைச் சொல்லி ஷரத்சந்திராவின் மனதினை மாற்றி வி்ட்டாள்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!