posted 2nd March 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 19ஆம் திகதி தொடக்கம் 21ஆம் வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;
- ககன் மனத்தினால் உடைந்து போனான். பூமியினால்தான் நிலைகுலைந்து போன நிலையினில் பூமி கொண்டுவந்த சந்தோஷமான செய்தி கூட அவன் காதில் விழவில்லை.
- ககனின் நிலையினைக் கண்டு துடிதுடித்துப் போன தாயுள்ளம். விரைந்து சென்ற ஷாரதா, கெஞ்சிக் கேட்டும் ஒத்து வராததினால், ஷரத்சந்திராவின் காலில் விழுந்தா ஷாரதா. எப்படியாவது, தன் மகனையும், மருமகளாகத் தான் ஏற்றுள்ள பூமியும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக.
- ஷாரதாவின் முடிவினை எதிர் பார்க்காத கிறிஷ்ணபிரஷாத். கலங்கிப் போய் வீட்டினை விட்டு வெளியேறினார்.
- பூமியினதும், ககனினிதும் engagement இனதே நிறைவேறியது. அதைவிட ஆச்சரியமானது, ஷாரதா அந்தக் கணமே ஐயரிடம் கல்யாணத் திகதியினை fix பண்ணியதினால் அதிர்ந்து போன அபூர்வாவும், ஷரத்சந்திராவும்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Salangai Oli - சலங்கை ஒலி - 19 - 21.02.2026
அபூர்வாவின் திட்டத்தினை முறியடித்த ஷாரதா. ஷாரதாவிடம் கேட்கக் கூடாத கேள்வியினையும், நிபந்தனையையும் வைத்த அபூர்வா, எல்லாவற்றிற்கும் தலையாட்டியாக இருக்கும் ஷரத்சந்திரவிற்கும் சவாலாக இருந்தது ஷாரதாவிடம் கேட்ட நிபந்தனை. ஒருவாறாக, ஷாரதா அபூர்வாவின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டதினால், பூமிக்கும், ககனுக்கும் engagement இடம் பெறுவதற்கு ஒத்துக் கொள்ளப்பட்டது.
அப்பா ஷரத்சந்திராதான், இருவரினதும் engagementக்கு இடஞ்சலாக இருந்திருக்கையிலே ஷாரதா, அபூர்வாவின் வீட்டிற்கு வந்து ஷரத்சந்திராவின் காலடியில் விழுந்து கெஞ்சிக் கேட்தற்கு மனச்சாட்சி இல்லாமல், அபூர்வா கேட்டுக் கொண்ட விவாகரத்திற்குத் தலையாட்டி ஒத்துக் கொண்டார்.
ஒரு தாய் எவ்வளவிற்கு மனத்தினால் உடைந்து போயிருப்பாள், நேர்மையாகவும், உண்மையாகவும், கம்பீரமாகவும், எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டவன் தனது மகன், கண்முன்னாலேயே மதுபானத்தினை குடித்து நிறை போதையில் வந்த போது, அவளின் வேதனையினைப் புரியாத, விளங்கிக் கொள்ளாதவர்களாக ஷரத்சந்திராவும், அபூர்வாவும்.
இதுதான் தாய்க்குரிய வரைவிலக்கணமே. அபூர்வாவைப் போன்றோர்களுக்கு அல்லவே. ஷாரதாவோ, தான் தாலி பாக்கியத்தினை விட்டுக் கொடுக்கவும், இல்லாவிடில், தனது உயிரினை விடவும் தயாரானா. தனது கணவன் தன்னை விட்டும், தனது பி்ள்ளைகளை விட்டும் வேறுரொரு பெண்ணான மீராவுடன் போன போது அடைந்த துயரத்தினையும், துன்பத்தினையும் விட இப்போ அபூர்வாவினதும், ஷரத்சந்திராவினதும் கேள்வியானது கொடூரமாக இருந்தது. ஒரு பெண்ணிடம் தாலியினைத் தா என்று கேட்பதும், அதனைப் பிடிங்கு எடுப்பதும், அந்தப் பெண்ணின் உயிரினை அவளின் உடலிலிருந்து உரித்தெடுப்பதனை விட வலியைத் தரும் என்று ஒருசிலர் உணர்ந்திருப்பார்கள். இதெல்லாம் எங்கே ஒரு கர்ப்பிணியை நெருப்பு வைத்து உயிருடன் கொழுத்திக் கொலை செய்த அபூர்வா போன்றவர்களால் விளங்கிக் கொள்ள முடியுமா?
தனது கணவன் கிறிஷ்ணபிரஷாத் சந்தோஷத்துடன் ஷாரதாவைச் சந்திக்க வந்த போது, ஷாரதாவின் இரண்டு optionsகளில் ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் கிறிஷ்ணபிரஷாத்.
ஒன்று, கிறிஷ்ணபிரஷாத் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அதாவது, தானும், ஷாரதாவும், ககனினதும், பூமியினதுமான கல்யாணத்தில் ஜோடியாக, அதாவது, புருஷன், மனைவியாக, அதாவது, ககனின் அப்பாவும், அம்மாவுமாக நிற்போமா என்றதற்கு, ஷாரதாவினது கேள்வி, அப்போ ககனின் கல்யாணத்தின் பின்பு, கிறிஷ்ணபிரஷாத் இங்கு வந்து தகப்பனாக தங்கள் வீட்டில் இருக்க முடியுமா? சீவிக்க முடியுமா? என்பதுதான். ஆனால், அது, கிறிஷ்ணபிரஷாத்தினைப் பொறுத்தவரை முடியாததொன்றாகும்.
இரண்டாவது, கிறிஷ்ணபிரஷாத்தும், ஷாரதாவும் விவாகரத்து பண்ணுவதுதான். இந்த இரண்டாவது கேள்வியினையும் கிறிஷ்ணபிரஷாத் எதிர்பார்க்கவில்லை. இரண்டு கேள்விகளுமே மிகவும் கஷ்டமானவையே.
ஷாரதா தனது விருப்பத்திற்காக இவற்றினைக் கேட்கவில்லை. மாறாக, தனது மகனினதும், பூமியினதும் கல்யாணம் நடந்தேறுவதற்காக, அம்மாவாக ஷாரதா என்னவும் செய்யத் துணிந்துள்ளமையானது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், இப்படியாக நடந்தேறினால், கிறிஷ்ணபிரஷாத் மாமாவாக பூமிக்கு இருப்பார், அதாவது மீராவின் புருஷனாகவே தவிர, ககனின் அப்பாவாக அல்ல. இந்தத் தொடர்பானது பூமிக்குத் தெரியவந்தால், பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
பூமி தனது அப்பாதான் தங்களது engagementக்கு சம்மதம் சொல்லி உள்ளார் என்பதனை ஷரத்சந்திரா, பூமியிடம் போய் ஷாரதாவிடமும், மாப்பிள்ளை ககனிடமும் சொல்லும்படி சொன்னதினால், பூமி ஓடோடிச் சென்று ஷாரதாவிடமும், ககனிடமும் சொல்லுகையில், ககன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தினால் நொந்து நொருங்கிப் போயிருந்தான். அதனால்தான், பூமியை கதைக்க வேண்டாம் என்று வெறுத்தொதுக்கினான்.
ஆனால், பூமியின் பக்கம் நியாயம் இருந்தும் சொல்ல வேண்டிய நேரத்தில் பூமி சொல்லாததுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்குமான காரணம். ஆனால், ஷாரதாவிற்கோ பூமியின் மேலே எந்தவிதமான கோபதாபமும் இல்லையாதலால், பூமியைப் போய் ககனிடம் கதைத்து அவனைக் குளிர்மைப்படுத்தும்படி கூறி ககனின் அறைக்கு அனுப்பி வைத்தா.
பூமியின் ஒரு கேள்வி ககனைப் பூமியின் பக்கமாகத் திரும்ப வைத்தது. ககனோ எல்லா பிரச்சனைகளுள்ளும் இருந்து அடிபட்டு மேல் நிலைக்கு வந்தவன். அவனுக்கு பூமி சொன்னது மிகவும் ஏற்றக் கொள்ளக் கூடியதாக இருந்தது. பூமியைக் கட்டியணைத்தான். இதுதான் உண்மையான அன்பென்பது.
பூமியோ தனது அப்பா இன்னமும் ககனுடன் கோபமாக இருக்கின்றார் என்று தெரியாதவளாய், அப்பாவிடம் ககனை கதைக்கும் படியும், தனக்கு உங்கள் இருவருக்கும் engagement செய்வதற்கு அழைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஷரத்சந்திராவும் வேண்டா வெறுப்பாகக் ககனிடம் அழைப்பினை விடுத்தார். அப்பவும், ககன் நம்பியும் நம்பாமலும்தான் இருந்தான். என்றாலும், ஷரத்சந்திராவின் அழைப்புக்கு மரியாதை செய்தான் ககன்.
ஷாரதாவின் குடும்பம் engagementறிற்காக ஷரத்சந்திராவின் வீட்டிற்கு வந்தார்கள். அபூர்வாவின் திட்டமோ இதில் கலவரம் செய்து இந்த நிகழ்வினை தானாக குளம்பிப் போகட்டும் என்று எதிர்பார்த்திருந்தாள். அதுவும் தங்களிலேயும், ஷரத்சந்திராவின் மேலும் ஒருவிதமான களங்கமும் இ்ல்லாத மாதிரியான திட்டமுமாகும். ஆனால், இதெல்லாம், அபூர்வா நினைத்தா, தான்தான் திட்டத்தில் கெட்டித்தனம் கொண்டவள் என்று. ஆனால், engagement முடிந்ததுதான் தாமதம் ஷாரதா எல்லார் முன்னிலையிலும், ஐயரை வைத்து கல்யாணத்திற்கான அடுத்த முகூர்த்த திகதியினை பார்க்கும்படி சொன்னது அபூர்வாவோ, ஷரதசந்திராவோ எதிர்பார்க்காத்தாகும். கல்யாணத்திற்கு மூகூர்த்த திகதியும் பார்க்கப்பட்டு கல்யாணம் ஒழுங்காகியது.
அபூர்வாவின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது எப்படியாவது பூமி ககனைக் கல்யாணம் பண்ணி வீட்டைவிட்டுத் தொலைந்தால் காணும் என்பது போலவும் தோன்றுகின்றது. ஏனென்றால், கொடுக்கும் சொத்துக்களைக் கொடுத்தனுப்பிய பின்பு இனி பூமிக்கும் இந்த வீட்டுச் சொத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றாகி விடுமல்லவா.
இனி கிறிஷ்ணபிரஷாத்தின் முடிவுதான் என்ன என்பதுதான் என்று நீங்கள் ஊகிக்கின்றீர்கள்?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!