Salangai Oli - சலங்கை ஒலி - 16 - 18 .02 . 2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysis ஆனது 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

ஷரத்சந்திரா, பூமியின் அப்பா தன் மகளுக்கே வில்லனாக மாறி தனது மகளின் வாழ்க்கையினை அழிக்கின்றார். யாராலே? அபூர்வாவினால் போட்ட குள்ளத் திட்டத்தினை விளங்கிக் கொள்ளாமல், அபூர்வா சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டிப் பொம்மையாக ஷரத்சந்திரா இருக்கின்றார்.
திட்டமிட்டபடி ககனும், பூமியும் தூர இடத்திற்குப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடானது, அப்பாவா? அல்லது ககனா? இந்தக் கேள்வியினை ககன் திரும்பவும் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளச் செய்தது பூமிதான். இந்தக் கேள்வியானது பூமியைப் பொறுத்தவரை முடிவெடுக்க முடியாத கேள்விதான். ஆனால், இதைப்பற்றி அறிந்து கொள்வதற்கு பூமி எல்லாவற்றினையும் விளக்கமாக ககனுடன் கதைக்க வேண்டும். ஆனால், பூமிதான் அதைச் செய்யாததினால், ககன் என்னதான் நினைப்பான்?

Salangai Oli - சலங்கை ஒலி - 16 - 18 .02 . 2026

எப்படியாவது, அபூர்வா யார் தொலைந்தாலும், இந்தச் சொத்தானது தனது கைக்கு வரவேண்டும் என்பதுவும், அதற்காக எவரையும் பலி கொடுப்பதற்கு தாயாராக இருக்கின்றாள் அபூர்வா.
பூமிக்குக் கிடைத்த கோளானது பொலிஸ் ஸ்ரேஷனிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர் றாஜேந்தரிடமிருந்துதான். அந்தக் கோளானது, ஒரு அதிர்ச்சியானதாக பூமிக்கு இருந்தது. அதாவது, சிறையில் இருந்த றாஜரத்தினம் தற்கொலை செய்து விட்டான் என்றும், அவன் இறந்து விட்டான் என்றும்தான் அந்தக் கோளாகும்.

பொலிஸ் ஸ்ரேஷனுக்கு விரைந்த பூமி அங்கு றாஜரத்தினத்தின் இறந்த உடலினை பார்த்துக் கொண்டிருந்தினை புதிதாக வந்த IPS பொலிஸ் அதிகாரி, ஜோகி, திசை திருப்பினான்.
இதற்குப் பின்னணியி்ல் இருப்பது அபூர்வாதான். தனக்குக் கிடைக்கும் ஒரு flatக்குக்காக இந்தக் கொலையினைச் செய்தான் இந்த IPS ஜோகி. றாஜரத்தினத்தினத்தின் முடிந்து போன செய்தியினை அபூர்வாவிற்கு உடனே அறிவித்தான். Flatரும் இவனுக்குக் கிடைத்தது. இந்தக் கொலைக் கேசினை ஒரேயடியாக close பண்ணுவதற்காகவே இந்தத் திட்டத்தினைக் கட்சிதமாக அபூர்வா, ஜோகியை வைத்து செய்வித்தாள் என்று நயனி பூமியிடம் சொன்னா.

இப்படியாக நடக்கும் என்று நயனி எதிர்பார்க்காததும் கூட. இனி என்னென்று இந்தக் கேசானது போகப் போகின்றது என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

ககனும், பூமியும் ஒருவரை ஒருவர் கல்யாணம் பண்ணுவதற்காக அதுவும் தூர இடத்திற்குப் போய் கல்யாணம் செய்வதற்காக போட்ட திட்டத்தினை குளப்ப வேண்டிய சூழ்நிலையில் பூமி. இதற்கு, ACP நயனி சொன்னதுதான் பூமிக்கு ஞாபகத்திற்கு வந்தது.

பூமியோ வெளிக்கிட்டு ககனுடன் போவற்காக ஆயத்தமாகி இருக்கையிலே, ககனையும், பூமியையும் அபூர்வாவின் கொலை முயற்சியியானது ஷரத்சந்திராவை வைத்து செய்வதற்கான திட்டமாக இருந்தது. இதிலும், அபூர்வா தான் தப்பிக் கொண்டு, தனது மாமா, ஷரத்சந்திராவை சிறைக்கு அனுப்புவதற்கான திட்டம்தான். இதனை, ஷரத்சந்திரா பூரணமாக நம்பி ககனையும், பூமியையும் கொலை செய்வதற்காக உசுப்பேற்றி வைத்திருக்கின்றாள்.

ககனையும், பூமியையும் சுட்டுத் தள்ளுவதற்காக இருக்கும் ஷரத்சந்திரா ஆயத்தாமாக இருக்கின்றார், அபூர்வாவுடன் சேர்ந்து. அபூர்வாவின் ஆளாக இருப்பவன்தான் புதிய பொலிஸ் அதிகாரி ஜோகி. இவனை வைத்தே மிகவும் இலகுவாக ஷரத்சந்திராவை கைது செய்ய அபூர்வாவே ஜோகிக்கு கோள் பண்ணிச் சொல்லுவாள். இதெல்லாம் தெரியாமல், ஒருவிதமான சிந்தையும் இல்லாமல், ஆக மிஞ்சி கிறிஷ்ணபிரஷாத் சொன்ன எதனையும் கணக்கெடுக்காமல் துவக்குடன் ஆயத்தமாக இருக்கும் ஷரத்சந்திரா.

இறுதி நேரம். தனது தாய்க்குக் கூடச் சொல்லாமல், பொய் சொல்லி விட்டு ககனும் வந்து விட்டான். பூமியும் ஆயத்தமாக இருக்கின்றாள், ககனுடன் போய் கல்யாணம் பண்ணுவதற்காக. ஆனால், கடைசியாக ACP நயனி கூறிய புத்திமதியினை நினைத்தவளாய் பூமி, ககனுடன் வர மாட்டேன் என்று மறுத்தாள். ககன் துடி துடித்துப் போனான். ஏன் என்று கேட்ட கேள்விக்குக் கூட சரியான பதில் சொல்லாமல், இப்போ, Chery குடிபோதையில் ககன் வந்த போது குடும்பமே அனுபவித்த கொடூரத்தினைச் சொல்லும் போது உடனே பூமி Cheryயிடம் Chery காரணம் கேட்காமலே தனது அப்பாவின் பாதுகாப்பிற்காகத்தான் தான் போகவில்லை என்று கூறியதினை ககனுடன் சேர்ந்து கதைத்திருக்கலாம்தானே.

இப்போது Cheryயிடம் சொல்வதில் ஒருவிதமான பலனும் இல்லையே. இப்போது ககனையும், அவனது குடும்பத்தினையும் கஷ்டப்படுத்திவிட்டு, தானும் தனது வாழ்க்கையினை அழித்துக் கொண்டு இப்போது உடனே ககனிடம் உண்மையினைச் சொல்லப் போகும் பூமியின் கோளினை ககன் எடுத்து என்ன பூமி என்று கதைப்பானா?

மகனின் நிலையினை எதிர்பார்க்காத ஷாரதாவிற்கு ஏதாவதொன்று செய்ய வேண்டும் என்று முடிவெடுதவவாய், பூரணியை ககனுக்குக் காவல் இருக்கும்படி சொல்லி விட்டு, ஷரத்சந்திராவைச் சந்திக்கச் சென்றா. ககனுக்கும், பூமிக்கும் கல்யாணம் செய்து வைக்கும்படி ஷரத்சந்திராவின் காலில் விழுந்து கேட்டா ஷாரதா.

அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால், ஷாரதா, கிறிஷ்ணபிரஷாத்தை விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஒரேயொரு optionஐக் கொடுத்தாள் அபூர்வா. மகனின் கல்யாணத்திற்காக, மகனின் வாழ்விற்காக ஷாரதா தனது வாழ்க்கையினை, தாலியினை விட்டுக் கொடுக்கத் துணிந்தா.
இதெல்லாம் ஒருதருக்கும் தெரியாது. அதுமட்டுமல்லாமல், அபூர்வாவின் கெட்ட குணமும், கொடூர மனமும் இன்னமும் ஷரத்சந்திராவிற்குத் தெரியாது. இப்பவும் பூமிக்கும், ககனுக்கும் அபூர்வாவின் பின்னணியில் ஷரத்சந்திரா அறிவிக்கும் கல்யாணமானது எங்கு போய் பிரளயம் ஆகின்றதோ தெரியவில்லை.

ஆனால், இதற்கு ககன் விரும்புவானா? இதனை கிறிஷ்ணபிரஷாத் கேள்விக் குறியாக பார்ப்பதிலிருந்து தெரிகின்றதுதானே. இதில் ஏதோ உள்குத்து இருக்கின்றது என்று கிறிஷ்ணபிரஷாத் சிந்திப்பதில் தவறில்லையே! ஏனென்றால், ஆரம்பத்திலிருந்து இன்று வரை அபூர்வா என்னத்தினைச் நினைப்பாள், என்னத்தினைச் செய்வாள், என்னத்தினைச் செய்து கொண்டிருப்பாள் என்று அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்தவர் கிறிஷணபிரஷாத்.

ஆனால், இங்கு ஷரத்சந்திரா ஏற்படுத்தப்படும் பூமி – ககனுக்குமான கால்யாணத்தில் ககனின் தாயின் தாலி இறங்கப் போகின்றதை கிறிஷ்ணபிரஷாத் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஒன்று, ஷரத்சந்திரவின் இந்தத் திட்டத்தினை முதலில் ககன் ஏற்றுக் கொள்ள வேண்டுமே! இப்போது ககன் பூமியில் மிகவும் கோபமாக இருக்கின்றான். அந்தக் கோபமானது தன்னை பூமி ஒதுக்கி விட்டாள் என்ற கவலையிலேதான். அத்துடன், பூமி உண்மையினை, தனது பிரச்சினையினை வெளிப்படையாகச் சொல்லாததுதான் பிரதான பிரச்சினையே! இதனை யார் சொல்வார்கள்? எப்போது ககனுக்குச் சொல்வார்கள்?

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)