posted 11th February 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
ACP நயனிக்கு அபூர்வாவில் சந்தேகம் ஏற்பட்டு விட்டது. ACP நயனி, இதனை பூமியுடனும், கிறிஷ்ணபிரஷாத்திடமும் பகிர்ந்து கொண்டா. அதற்குரிய ஆதாரங்களைத் திரட்டுவதற்காகத்தான் இந்த பகிர்வு நடைபெற்றது. இதற்காக மிகவும் அவதானமாக நடக்க வேண்டும் என்று பூமிக்கு அறிவுரையிகைக் கூறிய ACP நயனி. இந்த சந்திப்பில் ACP நயனிக்கு தனது உண்மையான ஷோபச்சந்திராவின் கொலை சம்பந்தமான கதையினை பூமி தடுத்தும், ACP நயனியின் மேலான நம்பிக்கையில் கிறிஷ்ணபிரஷாத் முழுவதுமாகச் சொன்னார்.
ஆனால், ACP நயனிக்கோ இன்னமும் ஷரத்சந்திராவின் கொலை முயற்சியானது பூரணமடையவில்லை. அதாவது, இடையில், ஒரு கதையின் தொடரில் இடைவெளி இருக்கின்றது என்று ACP நயனிக்குத் தோன்றியுள்ளது. அதுதான் என்ன என்பதற்கு ஒருவரிடமும் பதில் இல்லை.
Salangai Oli - சலங்கை ஒலி - 08 .02 . 2026
இதற்கிடையில், அபூர்வா தனது அடியாட்களில் ஒருவனுக்கு மேலதிகமான பணத்தினைக் கொடுத்து எப்படியாவது தனது கணவன் உயிருடன் இருக்கக் கூடாதென்று அந்த நடுநிசியில் அந்த professional killerஐச் சந்தித்தா. இனித்தான் ஷரத்சந்திராவிற்கு மிகவும் ஆபத்து என்பது இப்போது புலனாகின்றது.
ஆபூர்வாவின் இந்தச் சந்திப்பை ஒட்டுண்ணியாக உள்ள மருதாணி ஒட்டுக் கேட்டதனைக் கண்டு பிடித்த அபூர்வா. ஆனால், மருதாணியை மிகவும் நம்பும் அபூர்வாவிற்கு எப்போது மருதாணி துரோகம் செய்யலாம் என்று காத்திருக்கவும் வாய்ப்புண்டு.
மருதாணி, தனது கணவன் ஷரத்சந்திராவைக் கொலை செய்ய தான் எடுக்கும் முயற்சியானது தெரிந்து கொண்ட அபூர்வா, இனி மிச்சக் கதையினையும் சொன்னா. இது அபூர்வாவின் வாழ்க்கை. இதனை உணராமல் இந்த கொலை முயற்சிக் கதையினை, அடுத்தவனின் கதை போல மருதாணிக்குச் சொல்வது அவ்வளவு புத்திசாலித் தனமென எடுத்துக் கொள்ள முடியாது.
தனது மனைவி ஷோபச்சந்திராவின் பிரத்தியேகமான கார் றைவர் நாகறாஜினை வைத்து, ஷோபச்சந்திராவிற்கு என்ன நடந்தது என்ற உண்மையினை அறிய வைத்த கிறிஷ்ணபிரஷாத்தினை, ஷரத்சந்திரா நம்பவில்லை. அவ்வளவிற்கு அபூர்வாவின் மேலே ஷரத்சந்திராவிற்கு உள்ள மயக்கம்தான் காரணமாக இருக்கின்றது. இந்தச் சந்திப்பினை வீணாக்கி விட்ட ஷரத்சந்திராவின் மனதினில் ஒரு கீறலாக கிறிஷ்ணபிரஷாத் கூறிய கதையானது தாக்கத்தினை ஏற்படுத்தி விட்டது.
guest houseஇன் காவலாளி சீனுவை அழைத்து வரும் படி ACP நயனி தனது பொலிஸ் உத்தியோகத்தர் றாஜேந்தரிடம் பணித்திரிந்தா. அதன் பிரகாரம் சீனுவும் வரவழைக்கப்பட்டான். சீனுவை ACP நயனி, killer றாஜரத்தினத்தின் ஷெல்லினுள் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தினில் killer றாஜரத்தினத்தின் ஷெல்லினுள் அழைத்துச் செல்லப்பட்டான்.
ஆனால், ACP நயனியோ, killer றாஜரத்தினத்தினைத்தான் துன்புறுத்தினாவே ஒழிய சீனுவை அல்ல. Killer றாஜரத்தினத்தினை துன்புறுத்துவதிலே நடுங்கிப் போனான் சீனு. இறுதியில் யார்யார் அங்கு வந்தார்கள் என்பதனை ஒருவர் விடாமல் சொல்லி விட்டான் சீனு. இந்த விஷயத்தில் அபூர்வா CCTV Camera இல்லாத பின்பக்கத்து கதவினூடாக உள்ளே வந்தும், பின் பக்கமாக வெளியே போனதையும் விளக்கமாகச் சொன்னான். இது மட்டுமா சொன்னான். அந்த CCTV footage எல்லாவற்றினையும் அழிக்கும்படியாகச் சொன்னாள் அபூர்வா என்பதனையும் சீனு ACP நயனிக்குச் சொல்லி விட்டான். இதனை வைத்துக் கொண்டு மட்டும் அபூர்வாவைக் கைது செய்ய முடியாது என்று புரிந்த கொண்ட ACP நயனி.
ஆனால், அபூர்வா மிகவும் பயங்கரமானவள் என்பதனை ஷரத்சந்திரா இன்னமும் நம்பவில்லை. இதற்காக ஷரத்சந்திரா தனது காவலாளியிடம் ஒரு சிம்காட் வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, சீனு ஒரு புதிய சிப்காட்டினைக் கொண்டு வந்து கொடுத்தான். அதனை வைத்துக் கொண்டு ஷரத்சந்திரா, அபூர்வாவுடன் போனில் கதைத்தார். பின்பு அபூர்வாவின் வாயினால் உண்மையினை வரவழைப்பதற்காக தான் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்தது போல பாசாங்கு பண்ணினார்.
ஷரத்சந்திரா தற்கொலை செய்து விட்டார் என்று கண்டு விட்டு அதிர்ந்து போன அபூர்வா, அழுது புலம்பலானாள். உண்மையாக அபூர்வா அழுதாள்தான். ஏனென்றால், அவளுக்கு தனது முறைமாமன் ஷரத்சந்திராவில் அளவு கடந்த அன்பிருப்பதனால்தான்.
இந்த நிலையினில் ஷரத்சந்திரா எழுதி வைத்த கடிதமானது அபூர்வாவின் கண்ணில் பட்டது. வாசித்தாள். தான் ஷரத்சந்திராவின் முதல் மனைவி ஷோபச்சந்திராவை எப்படி கொலை செய்ததினைப்பற்றிய உண்மையானது அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றதை வாசித்தவளாய், தனது கணவர் ஷரத்சந்திரா இறந்து விட்டார் என்ற துக்கத்தில் உண்மையினை அவளே ஒத்துக் கொண்டாள்.
இதைத்தான் கிறிஷ்ணபிரஷாத்தும் சொன்னார்தானே. அப்போது நம்பாமல் கிறிஷ்ணபிரஷாத்தின் மேலே கோபம் கொண்ட ஷரத்சந்திரா தனது மைத்துணனை கள்வன் என்ற பழியினை மீண்டும் சுமத்தி அவமானப் படுத்தி துரத்தி விட்டதனை நினைத்தவராய், அபூர்வாவைக் கொல்ல முயற்சித்தார்.
ஆனால், இப்போது அபூர்வாவிற்குத்தான் பலம் அதிகமாக இருந்தது. ஏனென்றால், ஷரத்சந்திரா இப்போது குடித்து நிறை போதையில் இருக்கின்றார். இதனால், அபூர்வாவால் தன்னைக் கொல்ல வந்த ஷரத்சந்திராவை தனது முழுப்பலத்துடனும் தள்ளிவிட்டாள். உடைந்து கிடந்த போத்தலின் மேலே விழுந்த ஷரத்சந்திரா அறிவிழந்தார். விட்டுச் சென்றாள் அபூர்வா. அங்கிருந்த கடிதத்தையும் எடுத்துச் சென்றாள்.
இதுதான், இந்தக் கதைதான், அங்கு ACP நயனியின் சந்தேகத்திற்கிடமான விடுபட்ட பகுதியாகத் தெரிகின்றது. இதனைத்தான் கண்டு பிடிக்க வேண்டும். அதுதான் சீனு அங்கு ACP நயனியின் விசாரணையில் சொல்லி விட்டான். ஆனால், இன்னமும் ஆதாரங்கள் தேவையாக உள்ளது அபூர்வாவை கைது செய்து தன்கீழ் விசாரிக்க வேண்டுமென்றால்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!