posted 10th March 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 09ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;
- அபூர்வா, கணவன் ஷரத்சந்திராவின் செல்வாக்கினால் கைது செய்யப்பட்டிருந்த அபூரபாவை சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார். இதனை ஒரு பெரிய மனிதன் எனப்படுபவரின் நற்செய்கையென ஏற்றுக் கொள்ள முடியுமா?
- பூமி தனது அப்பாவிடம் செல்வாக்கினைப் பாவித்து நாட்டிய நிகழ்வின் நேரத்தினை பிற்போடும்படி கேட்ட ஒரு நியாயமான காரணத்திற்கு அவரால் தனது மகளுக்கு எந்த விதத்திலும் உதவ முடியாதென்றவர், ஒரு போதை வஸ்து வைத்திருந்தாள், மற்றவர்களுக்கும் பகிர்ந்தாள் என்று குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவளை என்னென்று காப்பாற்ற முடிந்தது.
- பூமிக்கு உயிர் கொடுத்தவள் உன் அம்மாவா? எங்கேயோ இருந்து வந்தவன், நீ கல்யாணம் முடிக்க போறவனா என்ற கேள்வியானது இப்போது பூமியின் வாழ்க்கையிலே விளையாடுகின்றது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Salangai Oli - சலங்கை ஒலி - 09 - 10.03.2026
அபூர்வாவோ தனது குள்ளத்தனத்தினை வெகுவாக பாவிக்கத் தொடங்கினாள். போதை வஸ்த்தை ககனின் காரினுள் வைத்தாள் அபூர்வா. இதற்கு மருதாணியும் உடந்தை. அதுமட்டுமல்லாமல், பாட்டிக்கு வந்த அனைவருக்கும் கொடுக்கவிருந்த குளிர் பானத்தினுள் போதை வஸ்தைக் கலந்து கொடுக்க வைத்தா. ஆகவே பாட்டிக்கு போதை வஸ்த்தினைக் கொண்டு வந்ததும் அபூர்வாவே.
அபூர்பாவோ இவ்வளவு காலமும் தான் செய்த குற்றங்களெல்லாம் ஆதாரம் இல்லாமலும், தனது அடியாட்களை வைத்துத்தான் செய்து கொண்டு வந்தா. ஆனால், இன்று பூமியின் ஆதாரத்தினால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டாள். இத்துடன் மருதாணியும் ஒன்றாகிப் போனா, அபூர்வாவுடன் சேர்ந்து.
பூமிக்கு எப்படித்தான் நன்றி சொல்வதென்று தெரியாமல், செய்வதென்றும் புரியாமல் ககன் அவதிப்பட்டான். இது ஒரு பெரிய விஷயம் எல்லாரையும் பொறுத்தமட்டில். போதைப் பொருள் விஷயத்தில் கைதானால் வாழ்க்கை அவ்வளவும்தான், சிறையினுள்ளேதான். இதைத்தான் ஆபூர்வா ககனுக்குச் செய்து ககனை சிறையினுள் நிரந்தரமாகப் போட்டு பூமியினதும், ககனினதும் கல்யாணத்தினை நிறுத்துவதற்கான திட்டமாகும். ஆனால், அபூர்வா தான் போட்ட தூண்டிலிலே தானே மாட்டிக் கொள்ளுவா என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
தனது மகன் ககனினதும், பூமியினதும் கல்யாணத்தினை நிறுத்தவோ அல்லது ஷாரதாவிடம் தனக்கு விவாகரத்து கொடுக்கும்படியும் இனி முயற்சி செய்யக் கூடாதென்று கிறிஷ்ணபிரஷாத் ஷரத்சந்திராவிடம் கேட்டுக் கொண்டாலும், இன்று அபூர்பாவுடன் சேர்ந்து இந்த கேடு கெட்ட வேலையினை ஷரத்சந்திராவும் செய்ததாக கிறிஷ்ணபிரஷாத் நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால், இதனை எதிர்த்து நின்றார் ஷரத்சந்திரா. அதனையும் நம்பினார் கிறிஷ்ணபிரஷாத்.
ஆனால், ககனுக்கோ ஷரத்சந்திராவிலோ நம்பிக்கை இல்லை. அதாவது, அபூர்வுடன் சேர்ந்துதான் இந்த போதை வஸ்து விவகாரத்தினைச் செய்து ககனின் மேலே போட்டிருக்கலாம் என்பது. இதனால், பூமியிடம் ககன் கேட்டுக் கொண்டது, இதனை உனது அப்பா ஷரத்சந்திராவிடம் கேட்டு உறுதிப்படுத்தும்படியாக. அதாவது, உனது அப்பாவிற்கு எங்கள் கல்யாணத்தில் விருப்பம் இருக்கா அல்லது இல்லையா? என்பதுதான்.
இதனை கேட்டறிந்து உறுதிப் படுத்துவதற்காக பூமி தனது அப்பாவின் அறையினுள் செல்கின்றாள். தகப்பனிடம் அதனைக் கேட்கின்றாள். ஆனால், பூமியின் அப்பா அதற்குப் பதில் சொல்வதற்கிடையில் மீரா அந்த அறையினுள் வந்து அவர்களின் கதையின் பதிலை தானே சொல்கின்றாள்.
அது மட்டுமல்லாமல், தனது தமையன் ஷரத்சந்திராவிடம் அபூர்வாவிற்காகப் பரிந்து பேசுகின்றா, மீரா. உண்மையான சுயருபத்தினை அறியாத, உணராத மீரா இவ்வாறு கதைப்பதினை பூமியால் தடுக்கவே முடியவில்லை. ஆனால், அபூர்வாவின் திட்டத்தினால், ஒரே நேரத்தில், ஒரே நாளில் கல்யாணமும், நாட்டியப் போட்டியும் நடைபெறுவதற்காக ஒழுங்காக்கி விடப்பட்டது.
இதனை பூமி தனது அப்பாவிடம் எடுத்துக் கூறியும், பூமியின் அப்பாவால் பூமிக்கு உதவி செய்யதர முடியாது என்று கூறியதற்கு, தனது மனைவியின் ஆசையை நீதான் பூமி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவளை அடங்க வைத்தார், ஷரத்சந்திரா. இவருக்கோ தாங்கள் போட்ட திட்டத்தில் பூமியையும், ககனையும் சிக்க வைத்து கல்யாணத்தினை இல்லாமலாக்குவதுதான் ஷரத்சந்திராவின் நோக்கமே.
சமுதாயத்திலே ஒரு பெரிய மனிஷன், மதிக்கப்படுபவர், தனது மனைவி போதைப் பொருளில் கைதாகி இருக்கையிலே, அவளை ஏதோ செய்து, சாட்சியங்களை உடைத்து, அவளை நிரபராதி என வெளியே கொண்டு வருவாராக இருந்தால், ஷரத்சந்திரா ஒரு மதிக்கப்படும் இடத்திலா இருக்கின்றார்?
அதைத்தானே கிறிஷ்ணபிரஷாத்தும் நேருக்கு நேராகச் சொன்னாரே, ஷரத்சந்திராவின் குணத்தினைப் பற்றி.
இப்போது பூமியினதும், ககனினதும் கல்யாணம் மிகவும் சிக்கலான பாதையிலே பயணம் செய்கின்றது. என்னென்று ககன், பூமி கல்யாணமானது நடைபெறும்?
ஒரேயொரு யோசனை என்னவென்றால், பூமியின் நாட்டியப் போட்டியிலே, ககனும் கலந்து கொள்ளுவான். நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கையிலே பூமியின் கழுத்தினில் ககன் தாலியினைக் கட்டும் ஒரு கட்டமானது இடம்பெறக் கூடியவாறு பூமியும், ககனும் அந்த நாட்டிய நிகழ்வினைக் கொண்டு போக வாய்ப்புண்டு. தாலி சொன்ன பிரகாரம் மண்டபத்திலா கட்ட வேண்டும்? இங்கே பெற்றார், உறவினர், பெரியோர், நண்பர்கள் சகிதம் நடைபெற்றால்தான் என்ன? அதுதான் நடக்கப் போகின்றது. உங்கள் கருத்துதான் என்ன?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் பதிவிடுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!