
posted 23rd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பந்தல் கால் பெண்ணின் வீட்டில் - முறையில்லாத வழக்கம் எந்த நாட்டில்
காலனுடன் கை கோர்த்து கயவர்கள் களத்தில்.
இது சுப்பாறாக இருக்குதல்லவா!
என்னுடைய channelஐ முதன் முறையாகப் பார்ப்பவர்கள் subscribe செய்ய மறக்க வேண்டாம்.
அத்துடன் எனது இந்த channelஐ ஏற்கனவே பார்த்த, subscribe செய்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாப்பிள்ளையைத் தம்பியாக நினைப்போமே, என்றால் பந்தக்கால் சடங்கு இங்கு செய்யலாம்தானே! இது மங்கையின் (suggestion) சஜஷனும், தீர்க்கமான முடிவும் கூட.
யாரும் இல்லாத அநாதை அவன், இவனுக்கு எங்கட வீட்டில இச் சடங்கைச் செய்யவது தேவைதான்.
இது இப்படி இருக்க, தேவ சந்நிதானத்தில் வைத்து கடவுள் படைத்த உயிரினை எடுப்பதற்காகத் துடிக்கும் பசுபதியும், மர்மக் குரலின் கொலைஞர்களும் துடிச்சுக் கொண்டிருப்பது எங்கே போய்த்தான் முடியப் போகுதோ தெரியவில்லை.
திருக் கோவிலில் வேண்டுதல்களை முடித்த அனைவருக்கும் பரிசுப் பொருட்களை வழங்குவதாக தலைவர் கேசவன் எடுத்துக் கொண்ட பொறுப்பைத் தனது ஆசீர்களை வழங்கிப் பரிசுப் பொருட்களையும் வெகு சந்தோஷத்தோடு கொடுத்துக் கொண்டிருக்கையில் தான் ஷென்மதிக்கு வைத்த துப்பாக்கியின் றவை கேசவனின் தோள்பட்டையினைத் துளைத்தது.
ஓவென்று அலறி வலியினில் துடித்தார் கேசவன். கேசவனின் பாதுகாவலர்கள் கேசவனை விட்டு விட்டு சுட்டவனை தேடி ஓடினர்.
றாஜேஸ்வரியுடைய பார்வையும் சூடு வந்த திசைநோக்கி சுட்டவனைத் தேடியது. றாஜேஸ்வரியின் கண்ணுக்கு பசுபதி தென்பட்டான் என்பது போன்ற றாஜேஸ்வரியின் முகபாவனை அப்போது இருந்தது. சுட்டவனை நோக்கி விரைந்தா றாஜேஸ்வரி. அது யாராக இருந்தாலும் றாஜேஸ்வரியுடைய துப்பாக்கியால் செத்தான் இன்டைக்கு.
பலவித தடங்கல்களையும் தாண்டி, வேண்டுதல்களை முடித்து, கால்வருத்தத்தினால் தாண்டித் தாண்டி நடக்கும் ஷென்மதி, துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் தப்பி வீட்டிற்கு வரும்போது நல்ல மனதோடு ஆராத்தி எடுப்புதற்கு யாரும் இல்லையே.
ஆனால், வேண்டா வெறுப்பில பவானி ஆராத்தி எடுத்தா, அதுவும் வஞ்சகத்தை உள்ளே வை, வெள்ளை மனத்தை வெளியில் காட்டு, என்பது பாட்டி தன் வேதாந்தத்தைச் சொன்ன பின்பு. இது சுப்பாறாக இருக்குதல்லவா!
இப்படியாக மனத்தில புழுக்கத்துடன் ஒரு நல்ல விஷேஷம் செய்வது வாழ்க்கைக்கு நல்லதா? நீங்களே சொல்லுங்களன், இது நல்லதா?.
முறையாக நடப்பனவற்றை முறையற்றவிதமாக மாற்றப் பிளான் போட்டிருக்கிறார்கள் பவானியும், பாட்டியும்.
இந்த பந்தக் கால் வைபவத்தில் ஒரு குளப்பத்தைச் செய்வோம் என்று பாட்டி தன் மனதில் ஒரு (short film) ஷோட் வில்மையே ஓட்டிப் பார்த்துவிட்டா.
அதற்குப் பாட்டி என்ன செய்தாங்க தெரியுமா? நாட்டி இருந்த வாழையின் கட்டினை அவிழ்த்து அதனைக் கீழே விழ வைத்து விட்டா.
அது மட்டுமா. அட அட அட வாழை விழுந்திற்றுதே - சகுனமே சரி இல்லையே என்று ஒரு (bit) பிற்றைப் போட்டா பாட்டி.
அதற்கு ஜால்றா போட்டா பவானி. இதுக்குத்தான் சாதகம் பார்க்கணும் என்று ஒரு (late) லேற்றான (suggestion) சஜெஷனையும் சொன்னா பவானி.
இதனை வைத்து, கூட்டிக் கழித்துப் பார்த்த றாஜேஸ்வரிக்கு இந்த வாழை எப்படி விழுந்தது என்று கொஞ்சம் கெஸ் (Guess) பண்ணக்கூடியதாக இருந்தது.
இதெல்லாம் கண்டு பிடிப்பதெல்லாம் ஒரு ஜூஜிப்பி (matter) மற்றர் றாஜீயம்மாவிற்கு.
ஏனென்றால், பவானிதான் ஒவ்வொன்றுக்கும் றாஜேஸ்வரியிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறதுமல்லாமல் ஒவ்வொன்றுக்கும் தடங்கங்கல் வரக்கூடிய வழிகளையும் முன்மொழிகிற ஆளாச்சே!
பவானி கேட்ட பந்தக்கால் கேள்விக்கு நல்ல பதில் சொன்னா றாஜீயம்மா. அப்ப இனி வரும் எப்பிசோட்களில் றாஜீயம்மாவின் பதில்கள் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம்.
றாஜேஸ்வரியிடம் கொலைகாரன் மாட்டுவானா?
அல்லது, றாஜேஸ்வரி நேராக பசுபதியினுடைய வீட்டிற்குச் சென்று கொலை அச்சுறுத்தல் செய்வாவா?
இனி என்னனென்ன தடங்கல்கள் வரக்கூடும் என்று றாஜேஸ்வரி யோசித்து அனைத்தையும் தகற்த்தெறியப் பிளான் போடுவாவா?
ஷென்மதி - கார்த்திக்கின் குடியினை கெடுக்க தானாகவே கூடும் கூட்டம் யார் யாரென்று அடையாளம் கண்டு இப்பவே அடக்குவாவா?
அத்துடன் துப்பாக்கியுடன் போகும் றாஜேஸ்வரியை பவானி காணச் சந்தர்ப்பம் வருமா?
நாளைய எப்பிசோட் றிவீயூவினில் சந்திப்போம்