
posted 11th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
அதிசொகுசு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று ஞாயிறு (10) இரவு 8 மணியளவில் கோப்பாய் – இராச பாதை சந்திக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தை சேர்ந்தவரும் கோப்பாயில் மோட்டார் திருத்தகம் நடத்துபவருமான ரொபின் என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினார்.
விபத்தையடுத்து அதிசொகுசு பேருந்தின் சாரதி அங்கிருந்து ஓடிச் சென்றுள்ளார். அந்தச் சமயம் பேருந்தில் பயணிகள் இருந்தனர். விபத்தையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் பேருந்தை தாக்கினர் என்றும் அவர்களை தாம் கலைத்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்தில் இறந்தவரின் உடலை மீட்டு யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)