
posted 10th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வவுனியாவில் வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்
வவுனியாவில் நேற்று (09) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி, விளக்குவைத்தகுளத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதே இடத்தில் பலியானார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணை, ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்தில் கண்டியைச் சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான கருணாதிலக்க(வயது-55) என்பவரே பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)