வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் நாளை வியாழக்கிழமை (14.09.2023) காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள உற்சவத்தில் விசேட திருவிழக்களாக எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 23ஆம் திகதி சனிக்கிழமை துகில் திருவிழாவும், 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு திருவிழாவும், 25ஆம் திகதி திங்கட்கிழமை கம்சன் போர் திருவிழா , 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழாவும், 27ஆம் திகதி புதன்கிழமை சப்பற திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திரத் தீர்த்த திருவிழாவும், 30ஆம் திகதி சனிக்கிழமை கேணித்தீர்த்தமும் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

இதற்கான பூரண ஏற்பாடுகள் இன்று இடம் பெற்று வருகின்றன.

ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம் பெறவுள்ள திருவிழாக்களில் அடியார்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொளீஸார் பதில் பொறுப்பதிகாரி பொலீஸ் பரிசோதகர் சேந்தன் தலமையில் இடம் பெற்றுவருகின்றன.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பருத்தித்துறை பிரதேச சபை ஆகிய ஆலய சூழில் பாதுகாப்பான குடி நீர், சுற்றுச்சுழல் சுற்றுச் சூழல் தூயமைப்படுத்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் தனது கடமைகளை இன்றே ஆரம்பித்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)