வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ. பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டம்பர் 27ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பினால் உலக சுற்றுலா தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு 1980ஆம் ஆண்டில் இருந்து வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த உலக சுற்றுலா தினம் அனுஸ்டிக்கப்படவில்லை. காரணம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை, கொரோனா தொற்றினுடைய தாக்கம் என்பவற்றினால் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இதனை நடாத்த முடியவில்லை,

எனவே, இந்த ஆண்டு நாங்கள் சிறப்பான முறையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் வெளிப்புறத்தில் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை சிறப்பான விதத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள், காட்சிக் கூடங்கள் என்பவற்றை கொண்டு இதனை நடாத்த இருக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு சுற்றுலாத் துறையினுடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதனுடைய நோக்கமாக இருக்கின்றது. நாங்கள் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிட்டு பார்க்கின்ற போது வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையினுடைய வளர்ச்சி, அது பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கின்றது, எனவேதான் கடந்த காலங்களை விட இவ் ஆண்டு முதன் முதலாக வெளிப்புறத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வாக இதனை நாங்கள் வடமாகாண சுற்றுலா பணியகத்தினுடைய முகாமைத்துவத்தினுடைய அங்கீகாரம், வடமாகாண ஆளுநருடைய நெறிப்படுத்தலுக்கும் அமைய 29ஆம் திகதி கொண்டாடுவதற்கு இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)