
posted 23rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ்.போதனா வைத்தியசாலை முன் வைத்தியர்கள் நேற்றுப் (22) போராட்டம்!
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், அதிகரித்த வரிச்சுமை, வேதன அதிகரிப்பு, தரமான மருந்துகள் அரச வைத்திய சாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் அங்கமாக, யாழ். போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (21) மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது தமது கோரிக்கைகளை அரசங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும் அது வரையில் தமது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் வைத்திய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)