மூன்றாவது நாளாக தொடரும் தொடர் போராட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மூன்றாவது நாளாக தொடரும் தொடர் போராட்டம்

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் 3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்ந்தது.

பண்ணையாளர்களும் கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழி போராட்டமாக இந்தத் தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது.

மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களின் மேய்ச்சல் தரை பிரதேசமான மயிலத்தமடு, பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த அறவழிப் போராட்டத்தை மயிலத்தமடு, பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு கம நல அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை சித்தாண்டி பிரதான வீதியில் ஒன்று கூடியவர்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் சித்தாண்டி முற்சந்தி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தனர்.

அங்கு பிள்ளையாரை வணங்கி தங்களது அறவழிப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என சிதறு தேங்காய் உடைத்து அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இப் போராட்டமானது சுழற்சியான முறையில் தொடருமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியான முறையில் கால்நடைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுதல், இறைச்சிக்காக வெட்டப்படுதல், களவாடப்படுதல் என்பன அதிகரித்துள்ளன. இதனால், பண்ணையாளர்கள் பெரும் அச்சுறுத்தல்களையும், இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்தின் பொது அமைப்புகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், கமக்கார அமைப்புகள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ப. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், முன்னாள் மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளான சிவலோகநாதன், கு.வி. லவக்குமார் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பவானந்தனும் கலந்து கொண்டனர்.

மூன்றாவது நாளாக தொடரும் தொடர் போராட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)