முஸ்லிம்கள் மீது விரல் நீட்டக்கூடாது

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முஸ்லிம்கள் மீது விரல் நீட்டக்கூடாது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முஸ்லிம்கள் மீது விரல் நீட்ட முனையக்கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

தனது கல்முனை அலுவலகத்தில் திங்கட்கிழமை (11) மாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்தபோது அவரது ஊடக செயலாளராக செயற்பட்ட ஆசாத் மௌலானா சனல் - 4 ஊடகத்திற்கு தெரிவித்துள்ள விடயங்கள் ஊடாக ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ள கருத்துக்களினால் மக்களிடம் பல்வேறு சந்தேகங்கள் எழுத்துள்ளன. இக்கருத்துகளை புறந்தள்ளிவிட்டு வெறுமனே கடந்து விட முடியாது.

ஆசாத் மெளலானா வெளியிட்டுள்ள கருத்துகளை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

ஆனால், இதன் மூலம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்து விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆகையினால், இதற்கு மேலதிகமாக தேசிய புலனாய்வு மற்றும் இன்டர்போல் போன்ற சர்வதேச பொலிஸ் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அதன் மூலம் உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் ஜனாதிபதியை வலுயுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஈஸ்டர் தாக்குதல் தொர்பில்.பல உண்மைகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் போது போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை நோகடிக்க முற்படுகின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவே பிள்ளையான், முஸ்லிம்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை கூறி வருகின்றார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சஹ்ரான் மீது நீதிமன்றம் பிடியாணை வழங்கியும் அவர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாட விடப்பட்டது ஏன்? இதற்கு காரணமாக இருந்தவர்கள் தொடர்பில் இப்போது உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குகளின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த தாக்குகளில் முஸ்லிங்களும், கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஹரீஸ் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள் மீது விரல் நீட்டக்கூடாது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)