மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்வுகூறல்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்வுகூறல்

புலனாய்வு உயர் அதிகாரிகள் முன்வந்து சாட்சியம் அளிக்கும் போது, உயிர்த்த ஞாயிறு படுகொலைத் தாக்குதல்களின் பின்னணியில் மறைக்கப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எதிர்வு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில், ஊடகவியலாளர்கள் சிலர், செனல் - 4 காணொளியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை கூறியுள்ளார் .

முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள மிக முக்கியமான மூளைசாலியைக் கண்டுபிடிப்பதற்கு, தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஒருவரின் உதவியாளராகச் செயற்பட்ட ஆசாத் மௌலானா என்பவர், செனல் - 4 ஆவணக் காணொளி மூலம் வெளியிட்டுள்ள தகவல்கள் இதுவரை உரிய முறையில் விடை காணப்படாத புதிரின் எச்ச சொச்சங்கள் சிலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இது சம்பந்தமான அரச உயர்மட்டத்தின் எதிர்வினையை உற்றுநோக்கி ஆய்வு செய்யும் போது, அமைச்சர்கள் இருவரது கூற்றுக்கள் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று முரணானவையாகத் தென்படுகின்றன. நீதியமைச்சர், எதிர்க்கட்சியின் ஒத்துழைப்புடன் சர்வதேச விசாரணைக்கு பாராளுமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார். மற்றோர் அமைச்சர் புலனாய்வோடு தொடர்புபட்ட அரச நிறுவனங்களை முடமாக்கி செயலிழக்கச் செய்யும் எத்தகைய வெளிப்படுத்தலுக்கும் இடமளிக்க முடியாது என எச்சரிக்கும் தோரணையில் கூறினார்.

இவ்வாறாக, விஷயம் அம்பலமாகும் போது அவர்களின் அணுகுமுறையில் உள்ள தயக்கத்தை நாம் காண்கின்றோம். எனவே, உண்மை வெளிவர வேண்டிய நேரம் இது. இன்னும் வெளிவர வேண்டிய பல உண்மைத் தகவல்கள் உள்ளன. மேற்கொண்டு விசாரணைகள் நடக்கும்கும் போது அவற்றை உரிய முறையில் கையாள்வோம்.

இதிலிருந்து தெரியா வருவது என்னவென்றால், அரசாங்கத்தில் உள்ள ஒரு சாரார் இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை வெளிவருவதை தடுக்க வேண்டும் அப்படி செய்யாது விட்டால் அரச இரகசியங்கள் வெளியாவதற்கு அது வழி கோலும். அதன் விளைவாக முழு அரச இயந்திரமுமே செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்றவாறு கூறுகிறார்கள்.

எங்களுக்கும் நாடு பற்றிய கரிசனை இருக்கிறது. நாட்டுப்பற்றார்கள் என்ற போர்வையில் ஒரு சாரார் இருக்கிறார்கள். அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்த கும்பல் ஒன்று திரிப்போலி என்ற பெயரிலும் செயல்பட்டதாகவும், அதற்கு தற்போதைய ராஜாங்க அமைச்சர் ஒருவர் தலைமைத்துவம் வழங்கியதாகவும் பிரஸ்தாப காணொளியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஒரு திட்டம் இருந்திருப்பதாக தெளிவாகத் தெரிகிறது

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல, அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட முக்கிய சாட்சியங்களோடு ஒப்பிடும்போது திட்டமொன்றை வகுத்து செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகின்றது.

அவ்வாறே தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்கள் கொண்டு செல்லப் பட்டுள்ளன. இதனை உருவாக்கியவர்கள் யார்? பயன்படுத்தியவர்கள் யார்? அவ்வாறு பயன்படுத்தி, பாரிய நாசத்தை ஏற்படுத்தி, தமது குறுகிய அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்ள முற்பட்டவர்கள் பற்றி தகவல்களை அறிந்தவர்கள் அவற்றைக் கூற முன்வரவேண்டும்.

இந்த நாட்டின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட முக்கிய அரச நிறுவனங்களை இல்லாமல் செய்ய முயற்சிப்பதாக யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது. சர்வதேச மட்டத்திலும், இந்த நாட்டு மக்கள் மத்தியிலும் உண்மையை வெளிப்படுத்தும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.

எமது நாட்டையும், நாட்டின் நற்பெயரையும் நாம் பாதுகாக்க வேண்டும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினரும் கூட மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதுபற்றிய தகவல்களை தேடிப் பெறும்போதும் எவருக்கு எதிராகவும் விரல் நீட்டும் போதும் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

விசாரணைகளோடு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நாட்டை விட்டு தப்பி சென்றரா? என ஊடகவியலாளர் கேட்ட பொழுது அவ்வாறு குற்ற புலனாய்வு திணைக்கால அதிகாரியொருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேர்ந்தது. ஏனென்றால், தலைசிறந்த ஊடகவியலாளர் ஒருவரான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையோடு சம்பந்தப்பட்ட துப்பு துலக்கலில் அவர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி எழுதியுள்ள நூலிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பல தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. அதுபற்றி பின்னர் நடக்கும் விவாதங்களின் போது குறிப்பிட தயாராக இருக்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குததலுக்கான திட்டம், தேர்தல் வெற்றி ஒன்றை நோக்கமாகக் கொண்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வக் காலகட்டங்களில் துப்புத் துலக்கலைத் தடுத்து நிறுத்துவதற்கு உயர் மட்டத் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயரதிகாரிகள் முன்வந்து உண்மைத் தகவல்களை கூற இருப்பதாக அறிகிறோம். அவ்வாறானால் அநேக திடுக்கிடும் விபரீதமான தகவல்கள் வெளியாகலாம்.

சட்டத்தை மதித்து நேர்மையாக கடமையாற்றிய உயரதிகாரிகள் பிழையாக குற்றஞ்சாட்டப்பட்டு பழி வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையை கூறுவதற்கு இடம் அளிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வீர்கள் என்று ஊடகவியலாளர் கேட்டபோது, ஜனாதிபதி தேர்தல் பற்றி இப்பொழுது கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னர் வேறு முக்கிய தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளன. பொதுத்தேர்தல் நடக்கக்கூடிய நிலைமை இல்லாமல் இருக்கிறது. அதனை முற்றாக புறக்கணிக்கும் நிலைமை காணப்படுகிறது. அது கவலைக்குரியது. தேர்தல்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பதென நாங்கள் உரிய நேரத்தில் தீர்மானிப்போம். ஆனால், பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்படக்கூடும்.

இராஜாங்க அமைச்சர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் கூறிய போதும், பேராயர் அந்தச் சம்பவங்களில் உண்மை இருக்கிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிக்க தயார் என்று அவர் (ஊடகவியலாளர்) கூறிய போதும் தனிப்பட்ட நபரைப் பற்றி கருத்து தெரிவிக்க தான் விரும்பவில்லையென்றும், அவ்வாறான தகவல்களை ஆதார பூர்வமாக பாராளுமன்றத்திலேயே குறிப்பிட முடியும் என்றும் கூறினார்.

மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்வுகூறல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)