
posted 8th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மாணவர்களே தவறவிடாதீர்கள்!
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை, கலாச்சார பீடத்தின் அரசியல் துறை, இலங்கை ஜனநாயக சோஷசலிசக்குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து குறுங்காலக் கற்கை நெறி ஒன்றை நடத்தவுள்ளது.
பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கென இந்த குறுங்காலக் கற்கை நெறி நாளை 9 ஆம் திகதி சனிக்கிழமையும், 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படவுள்ளது.
பாராளுமன்ற செயற்பாடுகளும், ஒழுங்கமுறைகளும் பற்றிய இந்த கற்கை நெறி, இலங்கை தென்கிழக்குபல்கலைக்கழக ஒலுவில் வளாக கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இரு தினங்களும் நடைபெறவிருப்பதுடன், மேற்படி குறுங்கால கற்கை நெறியில், பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்கள் 250 பேர் பங்கு கொள்ளவுள்ளதாகவும் பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத்துறையின், துறைத் தலைவர் கலாநிதி. எம். அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
மேலும், இந்த குறுங்கால கற்கை நெறியை, பாராளுமன்ற ஆய்வுப் பிரிவு முக்கியஸ்த்தர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை முக்கியஸ்த்தர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு வெற்றிகரமாகவும், மாணவர்களுக்குப் பெரும் பயனளிக்கத்தக்கதாகவும் நிறைவு செய்யவுள்ளனர்.
இதேவேளை இந்த கற்கை நெறி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு நாளை சனிக்கிழமை (9 ஆம் திகதி) 8.30 மணிக்கு ஒலுவில் வளாக கலை, கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.
கலை, கலாச்சார பீட அரசியல், விஞ்ஞானத்துறையின் துறைத் தலைவர் கலாநிதி. எம்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கலை, கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கற்கை நெறியை ஆரம்பித்து வைப்பார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)