
posted 17th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மந்துவில் படுகொலையின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் 24ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் வெள்ளி (15) தாய்த்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச. சத்தியரூபன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சி. குகனேசன், சமூக செயற்பாட்டாளர் த. லோகேஸ்வரன் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)