
posted 15th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மதுபானச் சாலை மக்களுக்குத் தேவைதானா?
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உடுப்பிட்டி சந்தியில் நேற்று (14) வியாழன் காலை இந்தப் போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு சில தினங்களுக்குள் மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)