
posted 30th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!
உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையுடன் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடாத்திய மாபெரும் பரிசளிப்பு விழாவானது இன்றையதினம் (30) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது.
விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி, இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
சித்தங்கேணியில் உள்ள மூன்று பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆரம்பப் பிரிவு மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வாகவே இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் சிற்றம்பலம் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் ப. பார்த்தீபனும், சிறப்பு விருந்தினர்களாக சங்கானை கல்விக் கோட்ட பணிப்பாளர் நொபேட் உதயகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவமலர் சுந்தரபாரதி, வட்டு இந்துக் கல்லூரியின் ஆசிரியர் பரமானந்தர் மதனகோபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகமட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)