
posted 6th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பாரதியாரின் கொள்ளுப்பேரனார் வருகை
மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி. இராஜ்குமார் பாரதி மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் ஆச்சிரமத்திற்கு விஜயம் செய்தார்.
இல்ல மாணவர்களுடன் அளவளாவிய கலாநிதி இராஜ்குமார் பாரதி பாரதியார் பாடல்களை நினைவு கூர்ந்தார்.
இதேவேளை, கலாநிதி.இராஜ்குமார் பாரதி மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழவகியற் கற்கைகள் நிறுவனத்திற்கும் விஜயம் செய்தார்.
செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதி பாரதியாரின் நினைவு நாளையொட்டியே இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, ஆன்மீக அதிதியாக நீலமாதவனானந்த ஜீ மஹராஜ், முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராசா, பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம், சிறப்பு அதிதியாக இளைப்பாறிய பேராசிரியர் சி. மௌனகுரு ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன்போது சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தரினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட யாழ் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)