
posted 13th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பல்கலைக்கழகத்தில் திருடிய கோப்ரல் கைது
ஷரியா பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் தற்போது இராணுவத்தின் பொறுப்பின் கீழ் இருக்கும் புணானை பிரதேசத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் ஆறு கணனிகள், 80 கூரை மின் விளக்குகளை கொள்ளையிட்டு சென்ற இராணுவ கோப்ரல் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ மற்றும் பொலிஸ் காவலரண்களை கடந்து முச்சக்கர சென்றுகொண்டிருந்த நிலையில், வெலிகந்தை கடவத்மடு பொலிஸ் வீதி சோதனை சாவடியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7ஆவது கெமுனு ஹோவா படைப்பிரிவின் நாவலடி இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் 35 வயதான இராணுவ கோப்ரலே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியில் கொள்ளையிட்ட பொருட்களை கந்துருவெல வரை எடுத்துச் சென்று அவற்றை பேருந்து மூலம் கொழும்புக்கு கொண்டு செல்ல சந்தேக நபர் திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)