
posted 9th September 2023

பேருந்திற்க்காக காத்திருந்த ஆசிரியையின் தங்கச்சங்கிலி அறுப்பு
(எஸ் தில்லைநாதன்)
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று சனிமாலை 04.30 மணியளவில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை பேருந்திற்காக காத்திருந்தவேளை உந்துருளியில் வந்த இருவரால் ஆசிரியையின் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது
இந்நிலையில் இது தொடர்பாக மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் உடனடியாக அவ்விடம் சென்ற மருதங்க்கேணி போலீஸார் மேலதிகாரி விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

7ம் திருவிழா
(ஏ.எல்.எம்.சலீம்)
கல்முனை நகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோட்சவத்தின் 7ம் நாள் திருவிழா வெகு சிறப்பாக நேற்று (08) இடம் பெற்றது.
அதன் போது சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்ததுடன் சுவாமி அருள் பெற பெருந்தொகையான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த பிரமேற்ஷவ பெருவிழா எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.
அதேவேளை எதிர்வரும் 13 ஆம் திகதி உட்சேபத்யொட்டிய தேர்பவணி கல்முனை மாநகரில் இடம்பெறும்.

அரிசி ஆலையில் தீ
(எஸ் தில்லைநாதன்)
இன்றையதினம் (09) தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவது நேற்று மாலை அரிசி ஆலை வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது, அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன எரிந்து முற்றாக நாசமாகி உள்ளன.
அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதா, அல்லது தீ வைக்கப்பட்டதா என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)