
posted 5th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

யாழ். இந்துக் கல்லுரி
(எஸ் தில்லைநாதன்)
நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுகளின் முடிவின்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விஞ் ஞான பாடப் பிரிவுகளில் 31 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன், பௌதிக விஞ்ஞான பாடத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் 6 இடங்களையும் உயிரியல் விஞ்ஞான பாடத்தில் மாவட்டத்தில் முதல் 5 இடங்களையும் இந்துக் கல்லூரியின் மாணவர்களே பெற்றுள்ளனர்.
2022 ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று பிற்பகல் வெளி யாகின.நேற்றிரவு வரை கிடைக் கப்பெற்ற முடிவுகளின்படி,
யாழ். இந்துக் கல்லூரியில் பௌதிக விஞ்ஞான பிரிவில் 21 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றனர். இதில், சிறீ.சிநேகன், லெ.அபிசேக், ச. அபிசேகன், ப. தீபக், மு. முகமட் இஷாத், வி. கிஷாலன் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் ஆறு இடங்களைப் பெற்றனர்.
இதேபோன்று உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 10 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றனர். இதில், அ. வித்யாசாகர், க. பவித்ரன், நா. சாரங்கன், த. அமலன், ர. தனுசன் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்தனர்.

பரு. ஹாட்லி
(எஸ் தில்லைநாதன்)
உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியை சேர்ந்த 14 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. நேற்றிரவு வரையான முடிவுகளின்படி, பருத்தித் துறை ஹாட்லி கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் பௌதிக விஞ்ஞான (கணிதம்) பாடத்தில் 3 ஏ சித்தி பெற்றனர்.
இதேபோன்று, உயிரியல் விஞ்ஞான பாடத் தில் மூன்று மாணவர்களும் வர்த்தக பிரிவில் ஒரு மாணவரும் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்.
இதேசமயம், பொறியியல் தொழில் நுட்ப பாடத்தில் அன்பழகன் திவான் பிரபாகர் 2 ஏ, பி சித்தி பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)