
posted 4th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தேர்தல்கள் திணைக்களத்தின் யாழ். பணிமனை திறந்துவைப்பு
புதிதாக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் தேர்தல்கள் திணைக்கள பணிமனை நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுல் பிரதம வருந்தினராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் புதிய கட்டடத்துக்கான பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன் கட்டடத்தையும் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில், தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆ. சிவபாலசுந்தரன் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் யாழ். மாவட்ட செயலகத்திற்குள் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்கள பணிகள் இனி யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய பணிமனையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)