
posted 28th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தடை உத்தரவை மீறி கட்டப்படும் விகாரை
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமாக இரவோடிரவாக விகாரை கட்டுமானப் பணி தொடர்கிறது என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையும் அந்தப் பகுதியில் இரகசியமாக விகாரை கட்டுமானம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் இரகசியமாக முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பெயர்ப் பலகை நடப்பட்டிருந்தது.
சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத இந்தப் பகுதியில் விகாரை அமைப்பது இன முறுகலை ஏற்படுத்தும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து கிழக்கு ஆளுநர் இந்த விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்திருந்தார். இதை பிக்குகள் எதிர்த்திருந்தனர்.
இந்த நிலையில், இரகசியமாக இரவிரவாகத் தொடரும் விகாரை கட்டுமானத்தை நிறுத்துமாறு ஆளுநரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)