
posted 27th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜனாவின் வாக்குமூலம்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும். ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளருமான கோ. கருணாகரனின் (ஜனாவின்) நாற்பது (40) வருட போராட்ட, அரசியல் வரலாறு கூறும் "ஜனாவின் வாக்குமூலம்" எனும் மணிவிழா மலர் வெளியீடும், விழா நாயகனின் அறுபதாவது (60 ஆவது) பிறந்த தின விழாவும் எதிர்வரும் 01.10.2023ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.31 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கி. துரைராஜசிங்கம் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)