
posted 10th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சொற்பொழிவாளர் ஒன்றியம்
கிழக்கு மாகாணத்தில் புதிதாக சொற்பொழிவாளர் ஒன்றியம் ஒன்று உதயமாகி உள்ளது.
சைவத் தமிழர்களின் விஞ்ஞான மெய்ஞான தொடர்புகளையும், ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள், சமய நிகழ்வுகளில் போதித்து சமூகத்தை நன்நெறிப்படுத்தும் நோக்கில் இவ் அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் என்ற பெயரில் உதயமாகி உள்ளது.
நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் கூட்டம் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.
இதன்போது ஒன்றியத்தின் தலைவராக சிவஸ்ரீ க.வி. பிரமீன் சர்மா, பொதுச் செயலாளராக தினேஸ்குமார், பொருளாளராக மோகன், அம்பாறை மாவட்ட உப தலைவராக லக்குணம், உப செயலாளராக தமிழகரன் சனாதனன், இணைப்பாளராக பிரதீபன் ஆகியோரும் சபையினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாக கட்டமைப்பை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஸ்தரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதுடன் இந்த நல்ல செயலை ஆரம்பிக்கும் முகமாக ஆலய வளாகத்தில் ஒன்றியத்தினால் மரக் கன்றும் நடுகை செய்யப்பட்டது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)