
posted 23rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிறையடைக்கப்பட்ட அம்மன் பிணையிலா விடுவிப்பு?
தெல்லிப்பளை கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விஐயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் நேற்று வெள்ளி மாலை இராணுவத்தினரின் அனுமதியுடன்உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)