
posted 15th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சவுக்கம் காட்டில் பரவிய தீ
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணல்காடு பகுதியில் சவுக்கம் காடு விஷமிகளால் தீ வைக்கப்பட்டு எரிந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கிற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (14) வியாழன் பிற்பகலில் இருந்து குறித்த சவுக்க காட்டில் தீ பரவால் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை அணைக்கும் பணியில் பிரதேச மக்கள், மற்றும் இராணுவம் ஈடுபட்டு வருவதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
குறித்த மணல் காடு சவுக்கங்காட்டு பிரதேசமானது விஷமிகளால் தீ வைக்கப்பட்டு பின்னர் எரிந்த சவுக்குக் காட்டில் இருந்து எரிந்த சவுக்கம் விறகுகள் வெட்டப்பட்டு அதனை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் பல வருடங்களாக இடம் பெற்று வருகிறது.
நாளாந்தம் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று சவுக்கம் மரங்களை வெட்டிச் சென்று அதனை விற்பனை செய்வதனை அவதானிக்க முடிகிறது.
சவுக்காங்காடானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே துரைரத்தினம் மற்றும் விடுதலைப் புலிகளால் மக்களின் பங்களிப்போடு வளர்க்கப்பட ஒரு காடாகும். இந்தக் காட்டினை வன திணைக்களம் மற்றும் வனஜீவராசி திணைக்களம் ஆகியன தனது காடாக அறிவிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதனை சமூக காடாக மாற்ற வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்திருக்கின்ற நிலையில் இதுவரை அது உத்தியோகபூர்வமாக சமூக காடாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் தினம் தினம் சவுக்கு மரங்கள் அழிக்கப்பட்டு விறகுக்காக வெட்டி செல்வதை தடுக்கும் நடவடிக்கையில் உரிய தரப்புகள் ஈடுபடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)