சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!
ஜெனிவாவில் மீண்டும் கஜேந்திரகுமார்

(எஸ் தில்லைநாதன்)

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

ஆயுத போராட்டம் முறியடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களின் பழமையான வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக பௌத்த விகாரைகள் கட்டப்படும் சில இடங்களில் அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மீது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சட்டத்தினை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு இலங்கை உறுதியளித்திருந்தபோதும் இதுவரை அது நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 2012ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றபோதிலும், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவித மாற்றமுமின்றித் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)