
posted 13th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிழக்கு பிரதி பிரதம செயலாளராக நஸீர்
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம். நஸீர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயனாவினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாகவே தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ. மன்சூர், விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துவண்டா, முதலமைச்சின் செயலாளர் என். மதிவண்ணன், ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் (திருமதி) ஆர்.யூ. ஜலீல், சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)