கிழக்கில் அஷ்ரப் நினைவேந்தல்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கில் அஷ்ரப் நினைவேந்தல்

மறைந்த முன்னாள் அமைச்சரும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 16 ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கிலங்கையின் முஸ்லிம் பிரதேசங்களில் வெகு சிறப்பாகவும், உணர்வு பூர்வமடாகவும் இடம்பெற்றன.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கிலுள்ள பல பிரதேசகிளைகள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்திய அதேவேளை முஸ்லிம் பள்ளிவாசல்களில் கத்தமுல் குர்ஆன் மற்றும் அன்னதானம் வழங்கல், மற்றும் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் போன்ற நிழக்வுகளும் இடம்பெற்றன.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நினைவேந்தல் நிகழ்வு சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத்தலைமையிலும், கட்சியின் தலைவுரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் தமிழ் நாடு பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் அப்துல் காதர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் மர்ஹ{ம் அஷ்ரப் பற்றிய சிறப்புப் பேருரையும் ஆற்றினார்.

இதேவேளை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூதூர் பேர்ல் கிராண்ட் வரவேற்பு மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அஷ்ரப் நினைவேந்தல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)