
posted 10th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஆடம்பர விற்னை நிலையம் ஒன்றில் இன்று சனிபகல் (10) ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ பரவல் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர், கூடியிருந்த பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதே நேரம் மின்சார சபையினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)