
posted 23rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் வியாழன் (21) காலை கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக இடம்பெற்றது.
இதன் போது தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்று வரும் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இறுதி யுத்தத்தின் போது கையளிக்கப்பட்ட உறவுகள், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள், பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், தற்பொழுது முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கு தொடுவாய் பகுதியில் அகலப்பட்டு வரும் மனித புதை குழியானது காணாமல் ஆக்கப்பட்டவர்களா? எனவும், அந்த புதைகுழியில் உள்ள மனித எச்சங்கள் யாருடையது எனவும் சர்வதேசம் உரிய விசாரணை நடத்தி தீர்வு பெற்றுத்தர வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
குறித்த போராட்டத்தினை கிளிநொச்சி, தர்மபுரம், அக்கராயான்குளம், கோணாவில், பளை உள்ளிட்ட பல பகுதியிலிருந்தும் பல அமைப்புகள் ஒன்றாக இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)