
posted 3rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கம்பத்துடன் மோதியதால் உயிரிழந்த இளைஞன்
இன்று (03) பிற்பகல் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கீரியான் தோட்டடம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீதியில் சென்ற மோட்டார் ஒன்று திரும்புவதற்கு சமிக்ஞை காண்பித்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த குறித்த இளைஞனது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த தொலைபேசி தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது சங்கானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)