
posted 18th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
உழவு இயந்திரங்கள் பறிமுதல்
இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய 17.09.2023 அன்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன் போது அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகம்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்போது சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)