
posted 6th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
உயர்நீதிமன்ற நீதியரசருக்கு கெளரவம்
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் வகுப் நியாய சபையின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வும் நூல் வெளியீடும் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில்இடம்பெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. றௌசுல் ஹாதி தலைமையில், நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், தொழில் நியாய சபை நீதிபதிகள், சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள், கல்வியியலாளர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் மற்றும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ. றௌசுல் ஹாதி ஆகியோருக்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் ஏ. ஹிபத்துல் கரீம், கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)