
posted 28th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இரவு நேரத்தில் கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவர் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் மூவரும் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் பல படகுகள் தடைசெய்யப்பட்ட Night அட்டை தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)