
posted 12th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் போராட்டம்
கோணாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி தெற்கு வலையக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறைய தொடர்ந்து காணப்படுவதனால் மாணவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த தெற்கு கல்வி வலைய பணிமனையின் அதிகாரிகள் பாடசாலைக்கு தரப்பட்ட ஆசிரியர்கள் வருகை தராத பட்சத்தில் தெற்கு கல்வி வலைய பணிமனையிலிருந்து அதிகாரிகள் வருகை தந்து ஆசிரியர் இல்லாத வெற்றிடங்களை நிரப்பி மாணவர்களுக்கு கல்வி வழங்க முடியும் என கடிதம் மூலமாக உறுதிமொழி கொடுத்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)