
posted 19th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆசிரியரிடம் 75 லட்சம் ரூபாய் மோசடி
அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு போலி முகவரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொழும்பைச் சேர்ந்த குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்த நேற்று குறித்த நபரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ள நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபரினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)