
posted 27th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அறவழிப் போராட்டத்தை அரங்கேற்ற ஆயத்தம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு வருகை தரும்போது பெரும் அறவழி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சாணக்கியன் எம். பி. தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு - மாதவனையில் 11ஆவது நாளாக மழைக்கு மத்தியிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, இந்தப் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக பங்கேற்ற அவர், மட்டக்களப்புக்கு ஜனாதிபதி வருகின்றபோது பெரியளவிலான அறவழி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)