அரசின் பொறுப்பை விளக்கிடும் துரைரெத்தினம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அரசின் பொறுப்பை விளக்கிடும் துரைரெத்தினம்

மாதவணை, மயிலத்தமடு பகுதிகளில் மேச்சற்தரைக் காணிகளை அடாத்தாக பிடிப்பவர்களை தடுத்து நிறுத்தவது அவசியமாகும். இது அரசின் பொறுப்பேயாகும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் வலியுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று, செங்கலடி, கோறளைப்பற்று தெற்கு, கிரான் ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல தசாப்தங்களாக அண்ணளவாக 50ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் மேய்வதற்குரிய மேய்ச்சல் தரையாக சுமார் 25ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளை கால்நடைப் பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இம் மேய்ச்சல் தரைக் காணியானது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை அமுல்படுத்துகின்ற அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மாவட்ட, மாகாண மத்திய நீர்பாசனம், விவசாயம், கால்நடைத் திணைக்களம், மகாவலி, வனவிலங்குத் திணைக்களம் இன்னும் பல திணைக்களங்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள், ஏனைய அமைப்புக்கள், இன்னும் பல திணைக்களங்களும், அமைப்புக்களும் சேர்ந்து வருடா வருடம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறும் மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதேச செயலாளார் தலைமையில் நடைபெறும் விவசாய அபிவிருத்திக்குழுக் கூட்டம் போன்றவற்றில் வருடாவருடம் முடிவுகளை எடுத்து கால்நடைகளை கொண்டு செல்லும் இடங்களாக இவ்விரு பிரதேச செயலகங்களிலும் உள்ள இடங்களைத் தெரிவு செய்து காலத்திற்கு காலம் ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் கால்நடைகளை அங்கு கொண்டு வைத்திருப்பது அரசின் கொள்கையாகும். இம் முடிவானது அரசாங்கத்தின் கொள்கையைத் தவிர தெருவில் செல்பவர்களின் கொள்கை அல்ல. இதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது கால்நடைகளின் மேச்சல் தரையாகும். இதன் கொள்கைகளை அமுல்படுத்துவதும், நடைமுறைப் படுத்துவதும் அரச நிருவாகமே.

தீர்மானிக்கப்பட்ட இடங்களான ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரலக்குளம் - 201 ஏ கிராமசேவகர் பிரிவுகளில் வெள்ளைக்கல், மேசைக்கல், புலூட்டுமானோடை, (மயிலத்தமடு, மாதவணை) ஒரு பகுதி கித்துள்வெவ - 185பீ கிராமசேவகர் பிரிவில் புலியடிப்பொத்தாணை, கோப்பாவெளி - 146 ஏ கிராமசேவகர் பிரிவில் கிடாரம்போட்டமடு, கொட்டான்கச்சி கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை - 209 டி கிராமசேவகர் பிரிவில் மாதவணை, மயிலத்தமடு, அம்புமுனை, ஆமிமடு அலியாரோடை, முருங்கையடிபட்டி, அத்தினக்கல்வெட்டை, குமாரவேல் வெட்டை நெலிகல், எழுவாரோடை, வடமுனை - 210 ஏ கிராமசேவகர் பிரிவில் மீராண்டாவில் இப்படி தீர்மானிக்கப்பட்ட பல இடங்களில் கிராம சேவகர் பிரிவிலுள்ள மாதவணை மயிலத்தமடு இடங்களிலுள்ள குறிப்பிட்ட ஏக்கர் காணிகளில் எமது மாவட்ட எல்லைக்கப்பாலுள்ள பெரும்பான்மை சகோதர சிங்கள இனத்தவர்கள் பதினைந்திற்கு மேற்பட்டவர்கள் காணிகளை துப்பரவு செய்து தற்காலிக கூடாரங்களை அமைத்து விவசாயச் செய்கைகளிலும், கால்நடைகளை சுடுவதும், கால்நடைகளுக்கு சுருக்கு வைப்பதும், கால்நடைப் பண்ணையாளர்களை அச்சுறுத்துவதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான விடயங்களை கால்நடைப் பண்ணையாளர்கள் நேரடியாகச் சென்று தடுக்கும் பட்சத்தில் இனமுரண்பாடுகள் ஏற்படும். இதன் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், ஆளும்தரப்பு, எதிர்த் தரப்பு மக்கள் பிரதிநிதிகளிடம் முறைப்பாடுகள் செய்தும் கால்நடைகளுக்குரிய காணிகளை துஸ்பிரயோகம் செய்வது தொடர்ந்து கொண்டே உள்ளது.

இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் விவசாயச் செய்கைகள், மேட்டு நிலப் பயிர்செய்கை, வேளாண்மை செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டு திகதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் உரிய நேரத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும். கால்நடைப் பண்ணையாளர்கள் மேச்சல் தரையாகப் பயன்படுத்திவரும் காணிகள் அடாத்தாக பிடிக்கப்படுவதனால் கால்நடைகளை எங்கு கொண்டு செல்வது என கால்நடைப் பண்ணையாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.

இப் பிரச்சினைகளை சட்ட ரீதியாக எதிர் கொள்ளாத பட்சத்தில் இனமுறுகல் ஏற்படும். அரச நிருவாகிகள் தலையிடும் பட்சத்தில் அரச நிருவாகிகளுக்கு எதிராக சிங்கள அரசு நடவடிக்கையை மேற்கொள்ளும்.

எனவே, ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் நல்லுறவுடன் அரசாகங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிறுத்த வேண்டும். அல்லது பிரதேசசெயலளர், அரசாங்க அதிபர், நலன் விரும்பிகள் நீதிமன்றம் ஊடாக அகற்றுவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதேவேளை கால்நடைப் பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசின் பொறுப்பை விளக்கிடும் துரைரெத்தினம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)