
posted 8th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அனைவரின் கவனத்திற்கு!
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கடந்த இரண்டு மாதகால பகுதியில் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலை, மத்திய பேருந்து நிலையத்துக்கு அண்மையாக நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு திருடப்பட்டன.
களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள்களை திருடுவோர் ஒரு வலையமைப்பாக செயல்படுகின்றனர் என்றும், மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களை கழற்றி விற்பனை செய்யப்படுவதால் அவர்களை கைது செய்வது சிக்கலாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை யாழ். நகரின் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடிச் சென்றமை சி. சி. ரீ. வி. கமெராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொலியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)