USAID ஊடாக இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டை அதிகரித்த அமெரிக்கா

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

USAID ஊடாக இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டை அதிகரித்த அமெரிக்கா

இலங்கையின் அபிவிருத்தியினை மேலும் அதிகரிப்பதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையினை மேலதிக நிதிகளாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சில் நடைபெற்ற விழாவில் அமெரிக்கா அறிவித்தது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிற்கிடையிலான ஒரு அபிவிருத்தி நோக்கத்திற்கான மானிய ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்கா வழங்கும் இந்த 19.23 மில்லியன் டொலர்கள் (ரூ. 6.2 பில்லியன்) கட்டுப்படுத்தப்படும். இந்த அபிவிருத்தி உதவியானது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக ஆட்சி நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதுடன் இலங்கையுடனான தனது பங்காண்மை மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களில் அமெரிக்கா கொண்டுள்ள தொடரான அர்ப்பணிப்பினையும் இது வௌிப்படுத்துகிறது.

செயற்பணிப் பணிப்பாளர் கிராவ் மற்றும் இலங்கை நிதி அமைச்சின் திறைசேரியின் செயலாளர் திரு. கே.எம். மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்குபற்றிய ஒரு விழாவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“USAID நிர்வாகி சமந்தா பவர் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் நியூயோர்க் நகரில் கலந்துரையாடியவாறு, இலங்கையுடனான எமது பங்காண்மை மற்றும் இந்த ஆச்சரியமான, வாய்ப்புகள் நிறைந்த நாட்டின் மக்களுக்கு நாங்கள் செய்யும் தொடரான உதவி ஆகியவற்றினை இந்த முதலீடு நிரூபிக்கிறது” என இலங்கை மற்றும் மாலைதீவிற்கான USAID செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவ் தெரிவித்தார். “இந்த நிதியைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக ஆட்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும், பாதிப்படையக்கூடிய மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான நெருங்கிய ஒத்துழைப்பினையும், மிகுந்த உள்ளன்புடைய பங்காண்மையினையும் மற்றும் இலங்கைக்கு வழங்கிய உதவியினையும் இலங்கை மக்கள் பாராட்டுகின்றனர்” என செயலாளர் சிறிவர்தன கூறினார். “ஜனநாயக, செழிப்பான மற்றும் மீண்டெழும் தன்மையுடைய இலங்கையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இம்மானியமானது வலுப்படுத்தும்” என அவர் மேலும் கூறினார்.

1956 ஆம் ஆண்டு முதல் உதவியாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (கிட்டத்தட்ட ரூ.720 பில்லியன்) அதிகமான தொகையினை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

USAID ஊடாக இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டை அதிகரித்த அமெரிக்கா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)