
posted 3rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
886 பேருக்கு நிரந்தர நியமனம்
கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனமானது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்வாங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இரண்டு வருட காலமாக வழங்கப்படாமல் தற்காலிக நியமனத்திலே பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் ஆளுநர் செந்தில் தொண்டமான், பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை மாகாண சபைக்குள் உள்வாங்கி அவர்களுக்கான நிரந்தர நியமனங்ளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருக்கோணமலை, மட்டக்களப்பு, அமபாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)