
posted 19th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வவுனியா பல்கலைக்கழகத்தில் புறக்கணிக்கப்படும் தமிழ்மொழி
வவுனியா பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமை வேதனைக்குரிய விடயமென்றும் இத்தைகைய செயற்பாடு மீண்டுமொரு முறை நடைபெறாதவாறு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.
செவ்வாய் (19) பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வவுனியா பல்கலைக்கழகத்தின் பௌதிக வளங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.வவுனியா பல்கலைக் கழகமானது, யாழ். பல்கலைக்கழகத்தின் கீழ் வவுனியா வளாகமாக 32 வருடங்களாக இருந்து அதன் பின்னர் வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு 2 வருடங்களாகியுள்ள நிலையிலும் வவுனியா வளாகமாக செயற்பட்டபோது காணப்பட்ட பௌதிக வளங்களை கொண்டே தற்போதும் பல்கலைக்கழகமாக செயற்படுகின்றது.
இலங்கையில் இறுதியாக 17ஆவது பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகத்தின் பௌதிக வளங்கள் தொடர்பாக தேசிய கொள்கை திட்டமிடல் ஊடாக 8 திட்டங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளதோடு 3 அமைச்சரவைப் பத்திரங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அத்தோடு வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தருடன் பேச்சு நடந்த கல்வி அமைச்சர் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)