
posted 10th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வடக்கு தொல்பொருள் திணைக்களங்களை அதிகளவில் ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்கள்!
வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுவதற்காக அதிகளவில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தொல்பொருள் மையங்களில் தங்க தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாது இருக்கும்போது இவ்வாறான வேலை வாய்ப்புக்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை என வடக்கு கிழக்கெங்கும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இவ்வாறு வடபகுதியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)