
posted 30th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிண்ணியா அல்ஹிரா முஸ்லிம் மகா வித்யாலயத்தின் தரம் உயர்வும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
கிண்ணியா வலயத்தின் முக்கியமான பாடசாலை ஒன்றாகத் திகளும் அல் ஹிரா முஸ்லிம் மகாவித்தியாலயம் பல வருடங்களாக உயிரியல் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்படாமல் இருந்தது இப்பிரதேச மாணவர்களின் கல்வியில் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்தியது.
தற்பொழுது 1ஏபி பாடசாலை தரம் உயர்த்தப்பட்டதோடு உயிரியல் விஞ்ஞான பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே மாகாண வீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் பல சாதனைகளைப் படைத்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபரின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அகிலா சூரியம், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி, பாடசாலை அதிபர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)