பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல் மாயம்!

(எஸ் தில்லைநாதன்)

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து அண்மையில் உயிரிழந்தமையை அடுத்து அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் சடலம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 வயதான குறித்த சிறுமி கடந்த மாத இறுதியில் உயிரிழந்ததுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து சடலம் காணாமல் போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் தோண்டப்பட்டுள்ளதுடன் சவப்பெட்டியும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் வவுனியா நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நெளுக்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

(எஸ் தில்லைநாதன்)

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதிகளில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேரைக் காங்கேசன்துறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகள் கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

எனினும் அக்காணிகள் இதுவரை காணி உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை எனவும், இதனால் அப்பிரதேசத்திற்குள் காணி உரிமையாளர் செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் அப்பகுதிகளுக்குள் சென்று வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் உள்ளிட்டவற்றை திருடி செல்வதுடன், வீடுகளில் காணப்படும் இரும்புகளையும் உடைத்துத் திருடி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பேர் நேற்று வைத்தியசாலையில் அனுமதி!

(எஸ் தில்லைநாதன்)

பலாலி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழழைம அனுமதிக்கப்பட்டனர்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

யாழ்.பல்கலை மாணவர்கள் இருவர் வழிப்பறியில் ஈடுபட்டனரென கைது!

(எஸ் தில்லைநாதன்)

வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகச் சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாட்களாகப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த மாணவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)