
posted 27th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பதவி உயர்வு நியமனம்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ. ஸ்ரீதர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதியாக கலந்து கொண்டு குறித்த உத்தியோகத்தர்களுக்கான பதவியுயர்வு நியமனங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர்கள், சுதேச மருத்துவத் திணைக்கள வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)